Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மேட்டூர் ஹெச்.எம். இவருதான்.. ரூமில் "மசாஜ்" செய்ய சொல்வாராம்..கதறிய மாணவிகள்.. தூக்கிய சேலம் போலீஸ்

Subscribe to Oneindia Tamil

சேலம்: ஒழுக்கத்தையும், பண்புகளையும் வளர்க்க வேண்டிவர்களே இப்படியிருந்தால், பள்ளி மாணவர்களை யார்தான் வழிநடத்துவது? பள்ளி மாணவிகளை, தனக்கு மசாஜ் செய்ய சொல்லியிருக்கிறார் இந்த ஆசிரியர்.. இவர் ஆசிரியர் மட்டுமல்ல, பள்ளியின் தலைமை ஆசிரியரும் இவர்தான்... பெயர் ராஜா.
மேட்டூர் அருகே கொளத்தூர் கருங்கல்லூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது... இங்குள்ள சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த 144 மாணவ, மாணவிகள் இந்த பள்ளியில் படித்து வருகிறார்கள்..

தலைமை ஆசிரியர்: இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜா.. 51 வயதாகிறது.. தொடக்க பள்ளி என்பதால், 5-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளை தன்னுடைய ரூமுக்கு தினமும் அழைத்து சென்ற, தனக்கு கை, கால்களை அமுக்கிவிட சொல்வாராம். பிறகு, தலையை மசாஜ் செய்ய சொல்லி பல தொல்லைகளை தருவாராம். மாணவிகள் இந்த வேலைகளை செய்ய தயங்கியுள்ளனர். ஆனாலும், அந்த குழந்தைகளை கட்டாயப்படுத்தி, மசாஜ் செய்ய சொல்லி உள்ளார்..

Salem Mettur Government School headmaster and Why did the School HM suspend

ஒருகட்டத்தில் மாணவிகள் பெற்றோரிடம் இந்த விஷயத்தை சொல்லி கதறி அழுதுள்ளனர். இதனால், கொந்தளித்துப்போன பெற்றோர்கள், ஸ்கூலுக்கே நேராக கிளம்பி வந்துவிட்டனர்.. தலைமை ஆசிரியர் ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

மசாஜ் சென்டர்: ஒரே நேரத்தில் மொத்த பெற்றோர்களும் திடீரென பள்ளியின் முன்புகூடி கோஷமிட்டதால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இங்கே என்ன கிளாஸ் நடத்துறீங்களா? இல்ல, மசாஜ் சென்டர் நடத்துறீங்களா? என்று கேள்வி எழுப்பினார்கள்.

Salem Mettur Government School headmaster and Why did the School HM suspend

இதுகுறித்து தகவலறிந்து கொளத்தூர் போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது சிலர், ஆவேசமாகி, ராஜா மீது கற்களை வீசி தாக்க முயன்றனர்.. ஒருசிலர் செருப்புகளை எடுத்து அவர்மீது வீசினார்கள்.. இதை பார்த்த போலீசார், ராஜாவை உடனடியாக, பக்கத்திலிருந்த கிளாஸ் ரூமுக்குள் பூட்டி வைத்து, தற்காத்தனர். இதனால், மேலும் கோபமடைந்த பெற்றோர், ராஜாவை கைது செய்யாமல், பாதுகாக்கிறீர்களே? என்று சொல்லி வாக்குவாதம் செய்தனர்.

திடீர் மறியல்: உடனடியாக அவரை கைது செய்ய வேண்டும் என்று மேட்டூரில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த திடீர் மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சிறிது நேரத்தில், மேட்டூர் ஆர்டிஓ தணிகாசம், தாசில்தார் முத்துராஜா, டிஎஸ்பி மரியமுத்து, கொளத்தூர் வட்டார கல்வி அலுவலர் சின்னராசு ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.. கோபத்தின் உச்சியில் தகித்து கிடந்த பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தையை மேற்கொண்டனர். தலைமை ஆசிரியர் மீது உரிய நடவடிக்கையை விரைவில் எடுக்கிறோம் என்று அனைத்து அதிகாரிகளுமே உறுதி தந்தார்கள்.

Salem Mettur Government School headmaster and Why did the School HM suspend

இதற்கு பிறகு சமாதானம் அடைந்த பெற்றோர் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.. பிறக, கூடுதல் போலீசார் அந்த பகுதிக்கு வரவழைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் மேட்டூர் மகளிர் ஸ்டேஷ்னுக்கு ராஜாவை அழைத்து சென்றனர்..

அதிரடி கைது: பின்னர், பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் அங்கு பணிபுரியும் ஆசிரியர்களிடம், போலீசார் விசாரணை நடத்தி அவர்களின் வாக்குமூலத்தையும் பெற்றனர். இறுதியில், தலைமை ஆசிரியர் ராஜா, போக்சோவில் கைதாகி உள்ளார்.. இதனிடையே, கல்வித்துறை அதிகாரிகளும் இதுகுறித்து விசாரணை நடத்தி, ராஜாவை பணி இடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டனர். இப்போது பள்ளிக்கு உள்ளும் புறமும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+