கோவை- செங்கோட்டை, நெல்லை சிறப்பு ரயில்களை மீண்டும் இயக்க வலிறுத்தப்படும்-சேலம் ரயில்வே அதிகாரி தகவல்
சோதனை ஓட்டம் நடத்தப்பட்ட கோவை செங்கோட்டை, நெல்லை சிறப்பு ரயில்களை மீண்டும் இயக்க வலியுறுத்தப்படும் என சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ராவ் தெரிவித்தார்.
கோவை: சோதனை ஓட்டம் முறையில் இயக்கப்பட்ட கோவை செங்கோட்டை, நெல்லை சிறப்பு இரயில்களை மீண்டும் இயக்க தென்னக இரயில்வே தலைமையிடம் வலியுறுத்தப்படும் என கோவை ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட சேலம் கோட்ட மேலாளர் யு எஸ் ராவ் தெரிவித்துள்ளார்.
புதிய மண்டல மேலாளராக பதவியேற்ற பின் கோவைக்கு வந்த யு.எஸ்.ராவ் ,ரயில்நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறுகையில் பொறுப்பேற்ற பின் முதல்முறையாக கோவை ரயில் நிலையம் வந்துள்ளேன்.

தமிழகத்தில் இரண்டாவது முக்கிய நகரமான கோவையில் பயணிகளின் வசதிகள் மற்றும் அடிப்படை தேவைகள் இருக்கின்றன. அதில் குறை இருந்தால் உடனே நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
முதல் லிப்ட் சில நாட்களில் இயக்கப்பட உள்ளது. இரண்டாவது லிப்ட் ஆறு மாதத்திற்குள் இயக்கப்படும். ரயில் நிலையத்தில் 4 நகரும் படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் மேலாளர் அறை அருகே உணவுக்கூடம் அமைப்பதற்கு பெரிய நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்தம் பெறப்பட்டுள்ளது. வருகின்ற ஆண்டுகளில் பயணிகளின் வசதிகளை கருத்தில் கொண்டு செயல்படவுள்ளோம். மேலும் நகரும் படிக்கட்டுகள் மின்சார பற்றாக்குறையின் காரணமாக இயங்கவில்லை. விரைவில் சரிபடுத்தப்படும்.
இரு அடுக்கு ரயில் கோவையிலிருந்து பெங்களூர் செல்வதற்கு சேலம் கோட்டத்தின் சார்பாக அனைத்து சோதனைகளும் முடிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு அடுக்கு ரயில் சேவைக்கான நேரம் மற்றும் தேதி இரண்டு மாதங்களுக்குள் அறிவிக்கப்படும்.
பரிட்சார்த்த முறையில் செங்கோட்டை மற்றும் திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு, பயணிகள் பற்றாக்குறை காரணமாக நிறுத்தப்பட்டது. தற்போது இந்த ரயில்களை மீண்டும் இயக்க தலைமையிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. கோவையிலிருந்து பொள்ளாச்சிக்கு தற்போது ரயில்கள் அதிகப்படுத்த வாய்ப்பில்லை என்றார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications