போனில் ஆபாச பேச்சு: சேலம் லோக்கல் டிவி தொகுப்பாளர்கள் போலீஸ் புகார்!
சேலம்: சேலத்தில் லோக்கல் டிவி நேரலை நிகழ்ச்சியின் போது போனில் தொடர்பு கொள்பவர்கள் ஆபாசமாக பேசுவதாக புகார் எழுந்துள்ளது. மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட பெண்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
சேலத்தில் வின்ஸ்டார் சிட்டி டெவலப்பர்ஸ் என்கிற தனியார் மனை விற்பனை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் மனைகள் விற்பனையை மேம்படுத்த, சேலத்தில் உள்ள லோக்கல் டி.வி சேனல்களில் நேரலை மூலம் விளம்பரம் செய்வதற்காக, அந்த நிறுவனத்தில் சில பெண்கள் பணிபுரிகிறார்கள்.

அப்படி நேரலை வழியாக விளம்பரம் செய்யும் போது வாடிக்கையாளர்கள் போன் செய்து மனை புக் செய்து கொள்ளும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்திருக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு டிவி நேரலை நிகழ்ச்சியின் போது போன் செய்து அந்த பெண்களிடம் ஆபாசமாக சிலர் பேசியுள்ளனர். அதுமட்டுமல்லாது நிகழ்ச்சியில் பங்கேற்ற குறிப்பிட்ட இரு பெண்களையும் தனியே தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசியுள்ளனர்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்நிறுவன பெண்கள், சேலம் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
புகார் கொடுக்க வந்த பெண்களிடம் பேசியபோது, "நாங்கள் எல்லாம் ஏழ்மையான குடும்பத்து பெண்கள். வேலைக்கு வந்தே ஆக வேண்டிய சூழலில் இருப்பவர்கள். நாங்கள் நிகழ்ச்சி நடத்துவது எங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலை. அதைத்தான் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.
மனை வாங்க விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம். விருப்பமில்லையெனில் விட்டுவிடலாம். அதைவிட்டுவிட்டு போன் செய்து அசிங்க அசிங்கமாக பேசுகிறார்கள். இதனால் எங்கள் வீட்டருகில் உள்ளவர்கள் எல்லாம் எங்களை கேவலமாக பார்க்கிறார்கள். எங்களது வீட்டிலும் இதனால் பிரச்னை உருவாகிறது. எங்களாலும் நிம்மதியாக பணி செய்ய முடியவில்லை. எங்களுக்கு இதை விட்டால் வேறு வழியும் இல்லை" என்றனர் கலங்கியபடி.
அந்த பெண்களுக்கு ஆபாச அழைப்புகள் வரும் தொடர்பு எண்கள் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதை வைத்து குற்றவாளியை பிடிக்க சேலம் பள்ளப்பட்டி காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications