உப்பு தட்டுப்பாடு வதந்தி.. அதிக விலைக்கு உப்பு விற்பனை.. சேலத்தில் 3 கிடங்குகளுக்கு சீல்
உப்பு தட்டுப்பாடு வதந்தியால் அதிக விலைக்கு உப்பு விற்பனை செய்ததால் சேலத்தில் 3 கிடங்குகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
சென்னை: சேலம் மாவட்டத்தில் உப்பு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வதந்தி பரவியதால் உப்பை அதிக அளவில் வாங்க மக்கள் குவிந்தனர். இதனால் கடைக்காரர்கள் அதிக விலைக்கு உப்பை விற்றனர். அப்படி அதிக விலைக்கு உப்பு விற்ற 3 கிடங்குகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.
கடந்த சில நாட்களாக வட மாநிலங்களில் உப்புக்கு தட்டுப்பாடு இருப்பதாக வதந்தி பரவியதால் மக்கள் நீண்ட வரிசையில் இரவு பகல் பாராமல் உப்பை வாங்கிச் சென்றனர். இதனால் உப்பின் விலை 200 ரூபாயில் இருந்து 400 ரூபாய் வரை விற்கப்பட்டது. மேலும், கூட்ட நெரிசலில் மூதாட்டி ஒருவரும் பலியானார்.

உப்பு போதிய அளவிற்கு கையிருப்பு இருப்பதால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று மத்திய அரசு, மற்றும் அந்தந்த மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இருந்தாலும் வதந்தியை யார் கட்டுப்படுத்துவது. வதந்தி அப்படியே தமிழகத்திற்கு பரவி வருகிறது. இரண்டு நாட்கள் முன்னர் திருத்தணியில் உப்புத்தட்டு வதந்தி பரவியதைத் தொடர்ந்து நேற்று சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் உப்புத்தட்டு வதந்தி பரவி உப்பின் விலை உயர்ந்து வருகிறது.
சேலம் மாவட்டம் மேட்டூரில் தட்டுப்பாடு காரணமாக உப்பு கிலோ ஒன்றுக்கு 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக வதந்தி பரவியது. இதையடுத்து பொதுமக்கள் அவசரமாக கடைகளுக்கு சென்று உப்பு வாங்கியதையடுத்து, ஒரு கிலோ உப்பு விலை 400 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதுதொடர்பாக தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் அங்குள்ள கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர்.
இதனைத் அடுத்து, நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் போதுமான அளவிற்கு உப்பு இருப்பதாகவும், உப்பு விலை குறித்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்று வருவாய்த்துறையினர் அறிவித்தனர்.
இந்நிலையில், சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் சம்பத் அஸ்தம்பட்டியில் உள்ள உப்பு கடைகளில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், சேலம் மாவட்டத்தில் 1541 ரேஷன் கடைகளில் 60 டன் உப்பு கையிருப்பு உள்ளது. பொதுமக்கள் அதிக விலை கொடுத்து உப்பு வாங்க வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், உணவு வழங்கல்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது, செவ்வாய்பேட்டையில் அதிக விலைக்கு உப்பு விற்ற 3 கிடங்குகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications