தென்காசி அருகே சமத்துவபுரம் வீடுகள் இடியும் அபாயம்.. 50 வீடுகள் சேதம்... இடியும் நிலையில் 15 வீடுகள்
தென்காசி: நெல்லை மாவட்டம் தென்காசி அருகே சமத்துவபுரத்தில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட வீடுகள் கன மழையால் சேதமடைய ஆரம்பித்துள்ளன. 50 வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில் 15 வீடுகள் இடியும் அபாயத்தில் உள்ளன.
கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம் பொய்கை ஊராட்சி மன்றப் பகுதியில் உள்ளது சின்ன பனையன் குளம் கிராமம். இங்கு வீடில்லாத ஏழைகளுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மிகவும் பள்ளமான பகுதியில், சமத்துவபுரத்தில் 20 ஏக்கர் நிலப்பரப்பில் 150 வீடுகள் கட்டப்பட்டது. இந்த வீடுகள் தாமதமாக பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் இந்தப் பகுதியில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்துவருவதால் இங்குள்ள சின்னப் பனையான் குளத்தில் தண்ணீர்வரத்து ஏற்பட்டு குளம் நிரம்பி வழிந்தது. நிலப் பகுதியில் தண்ணீர் நிரம்பியதால் கான்கிரிட் வீடுகளில் சுவர்கள் தானாகவே பெயர்ந்து விழத்தொடங்கின. தரமானதாக வீடுகள் இல்லாததால் மக்கள் அச்சத்தோடு கழித்துவருகின்றர்.
மேலும் குளத்தில் இருந்து வெளியேறும் அனைத்து நீரும் அப்பகுதியில் தேங்கிய நிலையில் நேற்று இரவு பெய்த பலத்த மழையின் காரணமாக குளத்தின் கரைப்பகுதியில் உடைப்பு ஏற்ப்பட்டது. குளத்தில் இருந்து வெளியேறிய நீர் சுமார் 50க்கும் மேற்ப்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது.
மழைநீர் வீடுகளை சூழ்ந்ததால் சுமார் 15 வீட்டு சுவர்களில் தானாகவே வெடிப்பு விழுந்தது. தரைத்தளம் மண்ணுக்குள் சுமார் 1அடி புதைந்தும் போனது. இதுகுறித்து சமத்துவபுரம் பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் சொல்லியும் இதுவரை யாரும் வந்து குளத்தையோ, வீடுகளையோ பார்வையிட்டு இந்த மக்களை பாதுகாப்பான பகுதிக்கு இடமாற்றம் செய்யவோ, பாதுகாப்பு அளிக்கவோ வரவில்லை.
மேலும் உடைந்த குளத்தை பொதுப் பணித்துறை அதிகாரிகள் வந்து பார்க்கவில்லை. அதனால் தாங்களாகவே மணல் மூட்டைகளை கொண்டு வந்து குளத்தின் உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தண்ணீருக்குள் தத்தளிக்கும் தங்களை அரசு பாதுகாக்க வேண்டும் என்றும் இரவில் வீடுகளுக்குள் விஷ ஜந்துக்கள் நுழைவதாகவும், தாமதமின்றி அதிகாரிகள் பார்வையிட்டு நடவடிக்கை எடு்க்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications