ஆடிட்டர் வந்தவுடன் நடிகர் சங்கத்தின் கணக்குகள் ஒப்படைக்கப்படும்- சரத்குமார்
சென்னை:நடிகர் சங்க கணக்குகளை ஒப்படைக்க வேண்டும் என்ற கார்த்தியின் பேச்சுக்கு ஆடிட்டர் வந்தவுடன் கணக்குகள் ஒப்படைக்கப்படும் என்று சரத்குமார் பதிலளித்திருக்கிறார்.
தென் இந்திய நடிகர் சங்கத்தின் 3வது செயற்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதன் பின்னர் நடிகர் சங்க நிர்வாகிகள், அதன் தலைவர் நாசர் தலைமையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தனர்.
இந்த பேட்டியின் போது முன்னாள் நிர்வாகிகள் முழுமையான கணக்கு காட்டவில்லை என்றும் கணக்குகளை ஒப்படைக்கக் கோரி பலமுறை கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது என்றும் நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி புகார் தெரிவித்தார்.

2013-14; 2014-15 ஆம் ஆண்டு கணக்குகளை முன்னாள் தலைவர் சரத்குமார் இன்னும் ஒப்படைக்கவில்லை. சங்க கணக்குகளை ஒப்படைக்காததால் தான் பொதுக்குழுவை கூட்டுவதில் சிக்கல் நிலவி வருகிறது.
தேர்தல் முடிந்து, 15 நாட்களில் கணக்கு கொடுப்பதாக கூறியிருந்தனர். ஆனால், இன்னும் கணக்கு காட்டவில்லை. நடிகர் சங்க கணக்குகளை உடனே ஒப்படைக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கார்த்தி கூறியிருந்தார்.
கார்த்தியின் இந்த குற்றச்சாட்டுக்கு "ஆடிட்டர் வெளியூர் சென்றிருக்கிறார்.அவர் வந்தவுடன் நடிகர் சங்கத்தின் கணக்குகள் முறையாக ஒப்படைக்கப்படும்" என்று நடிகர் சரத்குமார் பதிலளித்து இருக்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications