சிவகுமாரை கொலை செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும்- சசிகலா

புதுச்சேரியில் விஎம்சி சிவகுமார் படுகொலை செய்யப்பட்டதற்கு அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: புதுச்சேரியில் திமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த சிவகுமார், புதுவை சட்டசபை சபாநாயகராகவும் இருந்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்னர் அதிமுக அணிக்கு மாறினார்.

Sasikala condemns the death of former Puducherry minister Sivakumar

காரைக்காலுக்குட்பட்ட நீராவி என்ற இடத்தில் கட்டி வரும் திருமண மண்டபத்தின் கட்டுமான பணிகளைப் பார்க்க சிவகுமார் சென்றார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திடீரென சிவகுமார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். இதில் நிலைகுலைந்த சிவகுமாரை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தனர்.

சிவகுமார் கொலை செய்யப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் சிவகுமாரை இழந்து வாடும் அவரின் குடும்பத்தினருக்கு சசிகலா இரங்கல் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+