எல்லாமே சசி, தினகரன்தான்... ஜெயக்குமார், ஓ.பி.எஸ் எல்லாம் சும்மா.. நாஞ்சில் சம்பத்
கட்சியில் சசிகலாவும் தினகரனும் தான் அதிகாரம் படைத்தவர்கள் என நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
நாகர்கோவில்: அதிமுகவில் சசிகலாவும் தினகரனும் தான் அதிகாரம் படைத்தவர்கள் என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். ஜெயக்குமாரோ அல்லது ஓபிஎஸோ கட்சியில் எந்த மாற்றத்தையும் செய்யமுடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
அதிமுகவின் துணை கொள்கை பரப்பு செயலாளரான நாஞ்சில் சம்பத் சசிகலா மற்றும் டிடிவி தினகரனின் அதிதீவிர ஆதரவாளராக செயல்பட்டு வருகிறார். இதனால் தினகரனுக்கு எதிராக செயல்படும் எடப்பாடி அணியையும் ஓபிஎஸையும் சரமாரியாக வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் விளாசி வருகிறார்.
இந்நிலையில் நாஞ்சில்சம்பத் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கட்சியில் நிலவும் குழப்பங்கள் குறித்து விவரித்தார்.

அதிகாரம் படைத்தவர்கள்
அவர் பேசியதாவது, அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் சசிகலா தான். அவரால் நியமிக்கப்பட்டவர் துணை பொதுச்செயலாளர் தினகரன். இவர்கள்தான் கட்சியில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரும் அதிகாரம் படைத்தவர்கள் என்றார்.

ஒன்றும் செய்ய முடியாது
இவர்களை தவிர அமைச்சர் ஜெயக்குமாரோ, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வமோ கட்சியில் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார்.

ஏற்றுக்கொள்ளப்பட்ட தினகரன்
கழக தொண்டர்களால் முழு மனதுடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட தினகரனை தினமும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து வருகிறார்கள். சட்டசபை கூட்டத்தொடர் முடியும் முன்பு அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தினகரனை சந்திப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

திவாகரனுக்கு பொறுப்பில்லை
திவாகரனுக்கு கட்சியில் எந்த பொறுப்பும் இல்லை. தினகரன், உறவினர் என்ற முறையில் அவருடன் நல்ல தொடர்பில் இருக்கிறார் என்றும் நாஞ்சில் சம்பத் கூறினார்.

தேர்தல் கமிஷனுக்குதான் தயக்கம்
உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள நாங்கள் தயங்கவில்லை என்றும் அவர் கூறினார். தேர்தல் கமிஷன் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயக்கம் காட்டுவது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

ஊடகங்கள்தான் மிகைப்படுத்தின
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஓ. பன்னீர்செல்வத்தின் பின்னால் மக்கள் இருப்பதாக ஊடகங்கள் மிகைப்படுத்தி செய்தி வெளியிட்டனர். இப்போது ஓ. பன்னீர்செல்வம் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவருடன் பொன்னையன், பி.எச். பாண்டியன், பாண்டியராஜன், செம்மலை ஆகிய 4 பேர் மட்டுமே உள்ளனர் என்றும் நாஞ்சில் சம்பத் நக்கலடித்தார்.

கூலிக்கு ஆள் பிடித்து வருகிறார்கள்
பொதுக்கூட்டத்தில் பங்கேற்க கூலிக்கு ஆள் பிடித்து வருகிறார்கள். ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்கு பிறகு தினகரன் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்திக்கஉள்ளார். அந்த சம்பவம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணமாக இருக்கும். அரசியல் திருப்பு முனையை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

எடப்பாடிக்கு அழைப்பு
இந்த கூட்டங்களில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு அனுப்புவோம். அதில் பங்கேற்பதும், புறக்கணிப்பதும் அவரது விருப்பம் என்றும் நாஞ்சில் சம்பத் கூறினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications