ஆளுநர் ஏன் இன்னும் கூப்பிடலை.. பீதியடைந்த சசிகலா எம்பிக்களுடன் பரபர ஆலோசனை
போயஸ் கார்டனில் சசிகலா தலைமையில் அதிமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னை: போயஸ்கார்டன் இல்லத்தில் சசிகலா தலைமையில் அதிமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் ஆளுநர் ஆட்சியமைக்க அழைக்காதது குறித்து விவாதித்து வரும் சசிகலா டெல்லியில் எம்பிக்கள் போராட்டம் நடத்த வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.
முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைக்கக்கோரி சசிகலா ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து நேற்று கோரிக்கை விடுத்தார். எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தையும் அவர் ஆளுநரிடம் வழங்கினார்.

ஆதரவுக் கடிதம் கொடுத்து 20 மணி நேரத்துக்கு மேலாகியும் இதுவரை ஆளுநர் தரப்பில் இருந்து சசிகலாவுக்கு எந்த அழைப்பும் வரவில்லை.
இதனால் பீதியடைந்துள்ள சசிகலா மற்றும் மன்னார்குடி கும்பல் அதிமுக எம்பிக்களுடன் போயஸ்கார்டனில் உள்ள வீட்டில் ஆலோசனை நடத்தி வருகின்றது. இதில் எம்பிக்கள் நவநீதகிருஷ்ணன், வைத்தியலிங்கம், ஜெயவர்தன், அற்புதன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட எம்பிக்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில், ஆதரவு கடிதம் கொடுத்தும் ஆளுநர் ஏன் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கவில்லை என சசிகலா மற்றும் மன்னார்குடி கும்பல் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக டெல்லியில் எம்எல்ஏக்கள் அணிவகுப்பு நடத்தலாமா என்றும் அவர்கள் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
-
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications