ஜெயலலிதா படத்தை திறந்து வைத்து 'இந்தியா டுடே' மாநாட்டிலும் கண்ணீர் விட்ட சசிகலா!

இந்தியா டுடே மாநாடு சென்னையில் இன்று தொடங்கியது. இதனை தொடங்கி வைத்த அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை திறந்து வைத்தார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியா டுடே மாநாடு சென்னையில் இன்று தொடங்கியது. குத்து விளக்கு ஏற்றி இதனை தொடங்கி வைத்த சசிகலா, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை திறந்து வைத்து கண்ணீர் விட்டார்.

இந்தியா டுடே சார்பில் 2 நாட்கள் நடைபெறும் மாநாடு சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் இன்று தொடங்கியது. இதனை அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

 Sasikala opened Jayalalitha' photo and shed tears in india today conference!!

இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் கலை, அறிவியல் பொருளாதாரம் குறித்த தலைப்புகளில் தலைவர்கள் சிறப்புப்ரையாற்றயுள்ளனர்.

 Sasikala opened Jayalalitha' photo and shed tears in india today conference!!

இந்த மாநாட்டில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை, அவரது தோழியும், அதிமுக பொதுச் செயலாளருமான சசிகலா திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து ஜெயலலிதாவின் புகைப்படங்கள் குறும்படமாக திரையில் வெளியிடப்பட்டது.

இதனை பார்த்த சசிகலா அப்போது கண்ணீர்விட்டார். இதைத்தொடர்ந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. டெல்லிக்கு வெளியே முதல் முறையாக சென்னையில் இந்தியா டுடே ஊடக குழுமத்தின் மாநாடு நடப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+