சசிகலா புஷ்பாவின் அம்மாவும் முன்ஜாமீன் கோரி மதுரை ஹைகோர்ட் கிளையில் மனுத் தாக்கல்!
மதுரை: அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பாவின் தாயார் கெளரி தமக்கு முன்ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நேற்று மனுத்தாக்கல் செய்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்ததால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார் சசிகலா புஷ்பா. ஆனால் ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்ய முடியாது என பிடிவாதமாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் சசிகலா புஷ்பா மற்றும் குடும்பத்தினர் மீது அவரது வீட்டில் வேலை பார்த்த 2 பெண்கள் புகார் அளித்தனர். அதில் சசிகலா புஷ்பாவின் கணவர், மகன் ஆகியோர் கொடுத்த பாலியல் தொல்லைகளுக்கு சசிகலா புஷ்பா, அவரது தயார் கெளரி ஆகியோர் உடனிருந்தனர் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

குடும்பமே முன்ஜாமீன் மனு
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் தங்களுக்கு முன்ஜாமீன் கோரி சசிகலா புஷ்பா, கணவர் மற்றும் மகன் ஆகியோர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

ஆக. 22 வரை இடைக்கால தடை
இம்மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் வரும் 22-ந் தேதி வரை சசிகலா புஷ்பாவை கைது செய்ய இடைக்கால தடை விதித்தது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் சசிகலா புஷ்பாவின் தாயார் கெளரி நேற்று தமக்கு முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார்.

தாயாரும் முன்ஜாமீன் மனு
அதில், தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஸ்வரன், மகன் பிரதீப்ராஜா மற்றும் என் மீது புகார் அளித்து உள்ளனர். இதன்பேரில் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

விரைவில் விசாரணை
அதிமுக-வின் ராஜ்யசபா உறுப்பினராக இருந்த சசிகலா புஷ்பா சமீபத்தில் கட்சி விவகாரம் காரணமாக நீக்கப்பட்டார். இந்த சூழ்நிலையில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக எங்கள் மீது இந்த புகார் அளிக்கப்பட்டு உள்ளது என கூறியிருந்தார். இந்த முன்ஜாமீன் மனு மீது விரைவில் விசாரணை நடைபெற உள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications