ஓபிஎஸ்ஸை வேவு பார்க்க ஆட்களை ஏவிய மன்னார்குடி கோஷ்டி!
முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை வேவு பார்க்க ஒவ்வொரு இடத்திலும் அதிகாரிகளையே ஏவி விட்டிருக்கிறது மன்னார்குடி கோஷ்டி என்கின்றன தலைமை செயலக வட்டாரங்கள்.
சென்னை: முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை வேவு பார்க்க மட்டுமே தனியாக ஆட்களை வைத்திருக்கிறதாம் மன்னார்குடி கோஷ்டி.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவையும் ஆட்சியையும் கைப்பற்றிவிடலாம் என கனவு கண்டது மன்னார்குடி கோஷ்டி. ஆனால் மத்திய அரசோ முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மூலமாக இந்த நகர்வுகள் அனைத்துக்கும் செக் வைத்துக் கொண்டிருக்கிறது.

இதனால் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகிறது மன்னார்குடி வகையறா. முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை முழுமையாக கண்காணிக்கும் வகையில் தலைமைச் செயலகத்திலும் பெரியகுளத்திலும் தனியாக ஆட்களை போட்டு வைத்திருக்கிறார்களாம்.
அண்மையில் மத்திய அரசின் முக்கிய அதிகாரி ஒருவர் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்திருக்கிறார். இது தமிழக அரசின் உளவுத்துறைக்கே சில மணிநேரம் கழித்துதான் தெரியவந்தாம்.
உடனே இந்த தகவல் மன்னார்குடி கோஷ்டிக்கு பாஸ் செய்யப்பட்டிருக்கிறது. அவர்களும் என்னவோ ஏதோவென அரண்டு போயிருக்கிறார்கள். பின்னர்தான் மத்திய அரசு அதிகாரி வந்தது வேறொரு விஷயமாக என அறிந்து அமைதியாகி இருக்கிறார்கள்.
முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை கண்காணிக்க தனி ஆட்களைப் போட்டும் மத்திய அரசு நம் கண்ணில் மண்ணை தூவிவிட்டு நேரடியாக சந்தித்து வருவது மன்னார்குடி கோஷ்டியை அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications