ஜெ.சிகிச்சை பெறும் அப்பல்லோவில் சசிகலா குடும்பத்தினர் !
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவுடன் அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த ஒரு வாரமாக தங்கியிருந்த சசிகலா, முதல் முறையாக நேற்று இரவு மருத்துவமனையை விட்டு வெளியே கிளம்பி சென்றுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22 ஆம் தேதி உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை தோழி சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் அருகில் இருந்து கவனித்து வருகிறார்கள். வேறு யாருக்கும் ஜெயலலிதாவுடன் இருக்க அனுமதி மறுக்கப்பட்டது.

தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனையில் தங்கியிருந்த சசிகலா, கடந்த சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் இருந்து வெளியே காரில் புறப்பட்டுச்சென்றார். அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. இதையடுத்து தினமும் இரவு 8 மணிக்கு , அப்போலோ மருத்துவமனையில் இருந்து வெளியேறும் சசிகலா, ஒரு மணி நேரத்திற்குப் பின் மீண்டும் வருகிறாராம். நேற்றும் இந்த நிகழ்வு தொடர்ந்தது.
இந்நிலையில் நேற்று அப்பல்லோ மருத்துவமனையில் டி.டி.வி. தினகரன் மற்றும் அவரது குடும்பத்தினர், சசிகலாவின் அண்ணன் மகள் பிரபாவதி, சசிகலா வழக்கறிஞர், திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் ஆகியோர் வந்து சென்றனர்.
ஜெய் ஆனந்த் இரவு 09.05 மணி அளவில் காரில் வெளியே சென்றார். பின்னர் 9.58க்கு காரில் உள்ளே சென்றார். நீலநிற சட்டை போட்ட ஒருவரை காரில் இருந்து இறக்கிவிட்டுவிட்டு 10 மணிக்கு மீண்டும் வெளியே சென்றார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications