ஓபிஎஸ் அலுவலகம் மீது கல் வீசி தாக்குதல்.. போடியில் பதட்டம் !
முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் போடிநாயக்கனூர் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி: தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சட்டமன்ற அலுவலகம் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து அங்கு போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர்.
ஓ.பன்னீர் செல்வம் போடிநாயக்கனூர் தொகுதி சட்டசபை உறுப்பினராக உள்ளார். அவரது அலுவலகம் சுப்புராஜ் நகர் பகுதியில் உள்ளது. இந்நிலையில் போடியில் சசிகலா ஆதரவாளர்கள் இன்று ஊர்வலம் நடத்தினர். ஊர்வலம் முடிந்த சிறிது நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் அலுவலகத்திற்குள் சுமார் 30 பேர் கொண்ட கும்பல் நுழைந்தது.

அங்கிருந்த நாற்காலிகளை அடித்து உடைத்து கல்வீசியும் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து நகர மாணவர் அணி செயலாளர் ராஜவேல் என்பவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. அவர் லேசான காயம் அடைந்தார்.
அதன் எதிரொலியாக அருகில் உள்ள அ.தி.மு.க. நகர செயலாளர் பாலமுருகன் வீட்டில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் கல்வீசியதாக கூறப்படுகிறது. இதில் வீட்டுக்குள் இருந்த கார் லேசாக சேதம் அடைந்து உள்ளது. இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் விசாரணை நடத்தி வருகிறார்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications