வன்முறை எதிரொலி.. சத்யபாமா பல்கலைக்கழகத்திற்கு ஜன.1 வரை விடுமுறை!
Recommended Video

சென்னை: சத்யபாமா பல்கலைக்கழகத்தில் வெடித்த வன்முறையை தொடர்ந்து வரும் ஜனவரி 1 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை செம்மஞ்சேரியில் உள்ளது சத்தியபாமா பல்கலைக்கழகம். இங்கு கணினி அறிவியல் படித்து வந்தார் ஆந்திராவை சேர்ந்த மாணவி ராகமோனிகா. இவர் நேற்று காலை நடந்த செமஸ்டர் தேர்வில் சக மாணவியின் விடைத்தாளைப் பார்த்து எழுதியதாகவும், இதனைக் கவனித்த பேராசிரியர் ஒருவர் ராகமோனிகாவை தேர்வறையை விட்டு வெளியேற்றியதாகவும், ஆடைகளைக் களையச் சொன்னதாகவும் கூறப்படுகிறது.

இதனால், மனமுடைந்த மாணவி ராகமோனிகா பல்கலைக்கழகத்தில் உள்ள தங்கும் விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். போராட்டம் வன்முறையாக மாறியது. நேற்று ிரவு, பல்கலைக்கழக விடுதி வளாகத்திற்கு வெளியே தீ வைக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்தநிலையில், சத்யபாமா பல்கலைக்கழகத்திற்கு வரும் ஜனவரி 1ம் தேதிவரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக டிசம்பர் 6ம் தேதிவரை செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று பிறகு விடுமுறை அளிக்கப்படும். இப்போது வன்முறை காரணமாக முன்கூட்டியே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரிக்கு வந்த மாணவர்கள் இன்று பாதியிலேயே அனுப்பி வைக்கப்பட்டனர். ஜனவரி 2ம் தேதி முதல் மீண்டும் செமஸ்டர் தேர்வு நடைபெறும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications