ஜனவரியில் ரஜினி அரசியல் என்ட்ரி.. ஒன்இந்தியா சொன்னதை உறுதிப்படுத்துகிறார் அண்ணன் சத்திய நாராயண ராவ்!
ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து ஜனவரியில் மாநாடு நடத்தி அறிவிக்கிறார் என்று ஒன் இந்தியா தமிழ் தளம் கூறியதை தற்போது அவரது சகோதரர் சத்திய நாராயண ராவ் உறுதிப்படுத்தியுள்ளார்.
Recommended Video

தருமபுரி : ரஜினிகாந்த் வரும் ஜனவரியில் அரசியல் கட்சித் தொடங்குகிறார் என்று எப்பவோ நமது ஒன் இந்தியா தமிழ் தளம் கூறியதை தற்போது அவரது சகோதரர் சத்திய நாராயண ராவ் உறுதிப்படுத்தியுள்ளார்.
ரஜினிகாந்தை கடந்த பல ஆண்டுகளாக அவரது ரசிகர்கள் அரசியலுக்கு வருமாறு அழைத்து வந்தனர். எனினும் ரஜினி பிடிகொடுக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த மே மாதம் தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
அப்போது அவர் தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்றும் தன்னை வாழ வைத்த தமிழக மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்றும் போர் வரும் போது பார்ப்போம் என்றும் தெரிவித்தார். இது ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது.

கட்சி தொடங்க மும்முரம்
கடந்த சில மாதங்களாக ரஜினிகாந்த் கட்சி தொடங்கும் பணியில் மும்முரமாக இறங்கி வருகிறார். இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவார் என்பதை அவரது நெருங்கிய நண்பர் ராஜ்பகதூர் கூறியிருந்தார். எனினும் இதை ரஜினி மறுக்கவில்லை. இதனால் ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்து கிடக்கின்றனர்.

ரசிகர்களுடன் சந்திப்பு எப்போது
கடந்த மே மாதம் 15 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்ட ரஜினிகாந்த் தமிழக அரசியல் குறித்து பல்வேறு கருத்துகளை பேசினார். இதனால் அப்போது அரசியல் களம் சூடுபிடித்தது. இதையடுத்து மீதமுள்ள மாவட்ட ரசிகர்களை சந்திக்கும்போது அவர் கட்சி தொடர்பான அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ரஜினி அரசியலுக்கு வரமாட்டார்
அரசியலுக்கு வருவது பற்றி கமல் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லும் நிலையில் ரஜினி எதையும் அறிவிக்காமல் இருந்ததும் ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்ற விமர்சித்ததும் ரசிகர்களை வேதனை அடைய செய்தது. இந்நிலையில் அவர் தனது பிறந்த நாள் அன்று ரசிகர்களை சந்தித்து அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

சத்தியநாராயணா ராவ் பேட்டி
ரஜினிகாந்த் ரசிகர்களை சந்திக்காமல் நேரடியாக ஜனவரியில் அரசியல் மாநாட்டை தொடங்குகிறார் என்று நமது ஒன் இந்தியா தளம் முதலில் செய்தி வெளியிட்டது. இந்நிலையில் இந்த கருத்தை ரஜினியின் சகோதரரான சத்திய நாராயணராவ் உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து தருமபுரியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் ரஜினிகாந்த் வரும் ஜனவரியில் அரசியல் கட்சி குறித்து அறிவிக்கிறார். மக்களுக்கு நன்மை செய்வார். ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் அன்பானவர். மக்களுக்கு அவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications