• search

சென்னை மருத்துவமனையில் புற்றுநோயுடன் போராடும் 3 வயது சிறுவனுக்கு உங்கள் உதவி தேவை

By Veera Kumar
FOLLOW ONEINDIA TAMIL ON
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

  சென்னை: ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டு, சென்னை மருத்துவமனையில், சிகிச்சை பெற்றுவரும் 3 வயது சிறுவனுக்கு உங்கள் உதவி தேவைப்படுகிறது. யார் அந்த சிறுவன், என்ன பிரச்சினை அவருக்கு என்பதை அறிந்து கொண்டால் உங்கள் கண்கள் கண்டிப்பாக குளமாகும்.

  கோவையை சேர்ந்த விமல்ராஜ், ஐஸ்வர்யா தம்பதிகளின் மூத்த மகன் ஸ்ரீசாந்த்தான் அந்த சிறுவன். எப்போதுமே ஸ்ரீசாந்த்தை அவரது வீட்டுக்கு வெளியே நண்பர்களுடன் விளையாடுவதை பார்க்க முடியும். சுறுசுறுப்பாக, சுட்டியாக, ஆடி திரிந்த ஸ்ரீசாந்த்துக்கு அப்போதுதான் நேர்ந்தது அந்த கொடுமை.

  Save 3 Year Old Son Srisanth From Blood Cancer

  சுமார், ஒரு மாதத்திற்கு முன்பாக ஸ்ரீசாந்த் உடலில் ஆங்காங்கே காயங்கள் இருந்ததை பெற்றோர் பார்த்தனர். சில நாட்கள் கழித்து அவர் மிகவும் சோர்வடைந்ததையும் கவனித்தனர்.

  உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டன. அப்போது, மருத்துவர் கூறிய தகவலை காதால் கேட்க யாருக்கும் தைரியம் இருக்காது. ஏனெனில் "உங்கள் மகனுக்கு ரத்த புற்றுநோய் இருக்கிறது" என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இதை கேட்ட தாய் ஐஸ்வர்யா அப்படியே மயங்கி தரையில் விழுந்தார். தந்தை விமல்ராஜ் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இருவரும் இடிந்து போய்விட்டனர்.

  ஸ்ரீசாந்தின், கல்வி மற்றும் எதிர்காலம் குறித்து ஐஸ்வர்யாவுக்கும், விமல்ராஜுக்கும், பல்வேறு கனவுகள் இருந்தன. ஆனால், இந்த வார்த்தை அவர்கள் கனவுகளை கலைத்துவிட்டது.

  Save 3 Year Old Son Srisanth From Blood Cancer

  இன்னும் மூன்று வருடங்களுக்கு ஸ்ரீசாந்துக்கு மருத்துவமனை என்ற ஒரே வார்த்தைதான் பழக்கப்படும். அங்கேயேதான், அவர் இருக்க வேண்டியிருக்கும். ஒரு இன்ஃபெக்ஷன் போனதும் இன்னொரு இன்ஃபெக்ஷன் அவரை தாக்குகிறது. எனவே, அவருக்கு அடுத்த மூன்று வருடங்கள் வரை தொடர்ச்சியாக கீமோதெரபி சிகிச்சை தேவைப்படுகிறது.

  ஐஸ்வர்யாவுக்கு, ஸ்ரீசாந்த்துக்கு பிறகு பிறந்த 3 மாத பெண் கைக்குழந்தை உள்ளது. அந்த குழந்தையையும் அவர் பார்த்துக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது. ஸ்ரீசாந்த்தை நினைத்து உருகியபடியுள்ளார்.

  Save 3 Year Old Son Srisanth From Blood Cancer

  விமல்ராஜ்தான் சொந்த ஊரான கோவையை விட்டுவிட்டு, சென்னையிலுள்ள, ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்தபடி, மகனுக்கான, அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார். ஸ்ரீசாந்துக்கு தனது சிறு சகோதரி பாப்பாவை ஏன் இன்னும் தன்னிடம் காட்டவில்லை என்பது தெரியவில்லை. தங்கை பிறந்த சேதியை அறிந்தும், பாப்பாவை பார்க்க முடியாத தவிப்பில் உள்ளார் ஸ்ரீசாந்த்.

  ஸ்ரீசாந்த் சிகிச்சைக்காக, விமல் ராஜ் தனது வேலையை விடுவதற்கும் தயங்கவில்லை. அடுத்த மூன்று வருடங்களுக்கு ஸ்ரீசாந்துக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது விமல்ராஜுக்கு எந்த ஒரு வருமானமும் இல்லை. இருப்பினும், ஸ்ரீசாந்தை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் போராடி வருகிறார். ஸ்ரீசாந்த் அடைந்து வரும் துன்பத்தைப் பார்த்து, ஐஸ்வர்யா மனமுடைந்து துடிக்கிறார்.

  Save 3 Year Old Son Srisanth From Blood Cancer

  முடிஇழப்பு, இன்ஃபெக்ஷன், இரத்தம் வடிவது என அவதிப்படும், ஸ்ரீசாந்தை பார்த்து துக்கத்தில் உள்ளார் ஐஸ்வர்யா. ஸ்ரீசாந்துக்கு வீட்டுக்குத் திரும்ப வேண்டும் அவனது சகோதரியுடன் விளையாட வேண்டும் என்ற ஆசை உள்ளது. இந்த கஷ்ட காலத்தில் இருந்து விடுதலையாக வருங்காலத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் அவரின் பெற்றோர்.

  ஸ்ரீசாந்தை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கம் தான் இவர்களுக்கு. விமல் ராஜ் இதுபற்றி கூறுகையில், "எங்கள் மகனை நினைத்து எவ்வளவோ கனவு கோட்டை கட்டினோம். ஆனால், ரத்த புற்றுநோய் எங்கள் அனைவரையுமே உருக்குலைத்துவிட்டது. சிகிச்சை செலவுக்கு பணமின்றி தவிக்கிறோம். எப்படியாவது எங்களுக்கு உதவுங்கள்" என்கிறார் உருக்கமுடன்.

  ஐஸ்வர்யாவும் தனது மகனை நினைத்து வாடுகிறார். "10 மாதம் கஷ்டப்பட்டு சுமந்து பெற்ற, எனது மகன் ஸ்ரீசாந்த்தை, நோய் படுக்கையில் பார்க்க என்னால் முடியவில்லை. எங்கள் சக்திக்கு மீறிய அளவுக்கு செலவிட்டு சிகிச்சையளித்தோம். இனிமேல் நீங்கள்தான் உதவி செய்ய வேண்டும்" என்று அன்புள்ளம் கொண்டவர்களை நோக்கி அவர் கேட்கிறார். கஷ்டப்படும் அந்த குழந்தைக்கு, உங்களால் முடிந்த அளவுக்கு, உதவிக்கரம் நீட்டுங்களேன்.

  ஸ்ரீசாந்த்துக்கு உதவிக்கரம் நீட்ட இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.

  English summary
  Srisanth a 3 year old boy baby who is getting treatment in Chennai, needs to undergo 3 more chemo and need your help.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more