சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகாமல் இழுத்தடிப்பு.. ஐகோர்ட் நீதிபதி கர்ணனுக்கு பிடிவாரண்ட்
சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகாமல் இழுத்தடிப்பு செய்த கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதி கர்ணனுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை: கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதி கர்ணன், 7 பேர் கொண்ட சுப்ரீம் கோர்ட் அமர்வு முன்பு ஆஜராகாமல் இழுத்தடிப்பு செய்ததால் இன்று அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டில் நீதிபதியாக இருந்தவர் சி.எஸ்.கர்ணன். இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கொல்கத்தா ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார். தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவை வழக்காக எடுத்து, அதற்கு தடை விதித்தார் கர்ணன்.
இப்பிரச்சினை சுப்ரீம் கோர்ட்டின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதும், கர்ணன் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டு, அவர் கொல்கத்தா ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார்.

புகார்
இந்நிலையில், பிரதமர் அலுவலகம், சட்டத்துறை அமைச்சகம், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உள்ளிட்டோருக்கு நீதிபதி கர்ணன் புகார் கடிதங்களை அனுப்பினார். அதில், சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் மீது வீண் புகார்களைத் தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது.

7 நீதிபதிகள் அமர்வு
இப்பிரச்சினையை தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்காக சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு எடுத்தது. இவ்வழக்கை தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சலமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி.லோக்கூர், பி.சி.கோஸ், குரியன் ஜோசப் ஆகியோர் அடங்கிய 7 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கிறது.

இழுத்தடித்த நீதிபதி
இந்த வழக்கில் இன்று ஆஜராக வேண்டும் என்று நீதிபதி கர்ணனுக்கு சுப்ரீம் கோர்ட் அமர்வு உத்தரவிட்டிருந்தது. ஆனால் நீதிபதி வரவில்லை. நீதிபதி கர்ணன் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

பிடிவாரண்ட்
இதனையடுத்து, சுப்ரீம் கோர்ட் நீதிபதி கர்ணனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. நீதிபதி கர்ணன் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகும்படி சுப்ரீம் கோர்ட் அமர்வு உத்தரவிட்டும் அவர் ஆஜராகவில்லை. இதனையடுத்து நீதிபதி கர்ணனுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications