திருச்சி உழவர் திருவிழாவில் மோசடி.. அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு
திருச்சி உழவர் திருவிழாவில் மோசடி நடந்து இருப்பதாக தொடுக்கப்பட்ட வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி உழவர் திருவிழாவில் மோசடி நடந்து இருப்பதாக தொடுக்கப்பட்ட வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உழவர் திருவிழா நடத்தியதில் போலி ஆவணங்கள் மூலம் மோசடி நடந்ததாக கூறப்பட்டது. இதைப்பற்றி திருச்சியை சேர்ந்த அப்துல்லா உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினை தாக்கல் செய்திருந்தார்.

மோசடியில் ஈடுபட்ட வேளாண் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் வழக்கு தொடுக்கப்பட்டது.நடவடிக்கை கோரிய வழக்கில் தற்போதைய நிலை அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக விவசாயத்துறை இயக்குநருக்கு உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசு உடனடியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றுள்ளது.












Click it and Unblock the Notifications