மதுரை அருகே பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்... 3 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை அருகே பள்ளி மாணவியைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மதுரை அருகே உள்ள நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த 17 வயது சிறுமி பள்ளி ஒன்றில் பிளஸ் 1 படித்து வருகிறார். இவர் விடுமுறை நாளான சனிக்கிழமையன்று வடிவேல்கரைப் பகுதியில் தனது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த பன்னியானைச் சேர்ந்த பிரபு, திருநகரைச் சேர்ந்த முனியாண்டி, வடிவேல்கரையைச் சேர்ந்த செளந்தரப்பாண்டியன் ஆகிய 3 பேரும் மாணவியின் ஆண் நண்பரை அடித்து விரட்டி, மாணவியை அருகில் இருந்த புதருக்கு அருகே தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
இதுதொடர்பாக நாகமலைப் புதுக்கோட்டை காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்ததையடுத்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications