தினமும் தேசிய கீதம் பாடி வகுப்புகளைத் தொடங்குங்கள்- பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ உத்தரவு
சென்னை: மாணவர்களிடையே தேசப்பற்றை உருவாக்கும் வகையில் தினமும் வகுப்புகள் தொடங்கும் முன்பு தேசிய கீதம் பாடியே தொடங்க வேண்டும் என்று மத்திய செகண்டரி கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) பள்ளிக்கூடங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கொல்கத்தா ஹைகோர்ட்டில் உலகில் பல நாடுகளில் இருப்பதுபோல தேசிய கீதம் பாடியே பள்ளிக்கூடங்களை தொடங்கவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த உத்தரவுக்கேற்ப நாட்டில் உள்ள அனைத்து சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்களுக்கும் ஒரு உத்தரவு பிறப்பித்திருந்தது.

தேசிய கீதம் அவசியம்:
இதன்படி தினமும் பள்ளிக்கூடம் தொடங்கும்போது தேசிய கீதத்தை இசைத்தோ, மாணவர்களால் பாடச் சொல்லியோ தான் தொடங்கவேண்டும். மாணவர்களுக்கு தேசிய கீதம் பாடுவதற்கான பயிற்சிகளை அளிக்கவேண்டும்.

நாட்டு பற்று வேண்டும்:
நாட்டின் மீதும், தேசியகொடியின் மீதும் பற்று ஏற்படும் வகையிலான நடவடிக்கைகளை பள்ளிக்கூடங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

மாணவர்கள் பாடவேண்டும்:
பொதுவாக அனைத்து பள்ளிக்கூடங்களிலும் வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பு இறைவணக்கம் பாடி தொடங்குகிறார்கள். இத்தகைய பள்ளிக்கூடங்களில் இனி தேசிய கீதமும் இசைக்கப்பட வேண்டும் அல்லது மாணவர்களால் பாடப்படவேண்டும் என்பதுதான் இந்த உத்தரவின் அவசியம் என்று கல்வியாளர் ஒருவர் தெரிவித்தார்.

எல்லா பள்ளிகளும் பாடலாம்:
சி.பி.எஸ்.இ பள்ளிக்கூடங்களுக்கு பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு, மாநில அரசின் உதவிபெறும் பள்ளிக்கூடங்களுக்கு பொருந்தாதது. என்றாலும், இது மிக நல்ல ஒரு முயற்சி என்ற வகையில், இதை மாநில அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களிலும், சுயநிதி பள்ளிக்கடங்களிலும் மட்டுமல்லாமல், அனைத்து கல்லூரிகளிலும் தொடங்க தமிழக அரசும் நடவடிக்கை எடுக்கவேண்டும். பள்ளிக்கூட கல்வித்துறையும், கல்லூரி கல்வித்துறையும் இதற்கான முயற்சிகளை பிறப்பிக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications