காரைக்குடியில் புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுக்கான கண்காட்சி
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் டெல்லி அறிவியல் தொழில்நுட்ப மையம் சார்பில் புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுக்கான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

அழகப்பா மெட்ரிக் பள்ளி முதல்வர் குமரன் கணேசன் வரவேற்றார். அழகப்பா பல்கலைக்கழக பதிவாளர் கண்காட்சியை துவக்கி வைத்தார். கண்காட்சியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளி மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகள் 350க்கு மேல் இடம் பெற்று இருந்தது. மாணவர்கள் காட்சிப்படுத்திய படைப்புகளை பார்வையாளர்களுக்கு விளக்கினர்.

மாலை நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு சிவகங்கை மாவட்டம் முதன்மைக் கல்வி அலுவலர் திரு. செந்திவேல் முருகன் அவர்கள் தலைமை வகித்தார். தேவகோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் மாரிமுத்து அவர்கள், சிவகங்கை மாவட்டக் கல்வி அலுவலர் மாணிக்கம் அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கண்காட்சியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது. உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி அளவில் முதல் பரிசு காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவி செல்வி.சபானாவிற்கு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சண்முகநாதன், தொடக்கக்கல்வி மாவட்டக் கல்வி அலுவலர் பார்த்தசாரதி, ஒருங்கிணைப்பாளர்கள் அருணச்சலம், வெங்கட முத்து நடேசன் உளப்பட பலர் கலந்து கொண்டனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications