பணத்தை கொடுத்து அதிமுகவும்-திமுகவும் வாக்குகளை பறிக்க முயற்சி: சீமான் குற்றச்சாட்டு
ராமநாதபுரம்: அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் பணத்தை கொடுத்து வாக்குகளை பெற்றுவிடலாம் என நினைக்கிறார்கள் என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபைக்கு நடைபெறவுள்ள தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்திய சீமான், தமிழகம் முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அதன் ஒருபகுதியாக ராமநாதபுரம் அரண்மனை அருகே தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்ட சீமான் பேசியதாவது: தமிழ் தேசிய நலத்தின் இறையாண்மை உரிமையை கேட்கிறோம். தமிழ் மண்ணை தமிழன் ஆண்டு இருந்தால் இவ்வளவு பெரிய துன்பம், துயரம், வறுமை, ஏழ்மை வந்து இருக்காது.
தமிழன் நாட்டை தமிழன் ஆள வேண்டும் என்பது அந்த இனத்தின் அடிப்படை உரிமை. எல்லை தாண்டி செல்வதற்காக மீனவர்கள் சிறை பிடிக்கப்படவில்லை. தமிழன் என்ற ஒரே காரணத்திற்காக சிறை பிடிக்கப்படுகின்றனர். தேர்தல் அறிக்கையில் விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக கூறுகிறார்கள். இந்த விவசாயியை கடனாளியாக ஆக்கியது யார்? கடன் வாங்கி கல்வி கற்க வைத்தது யார்? தகப்பன் இல்லாத வீடு தட்டுக்கெட்டு நிற்பது போல் சரியான தலைவன் இல்லாமல் தமிழ்நாடும், தமிழ் இனமும் தட்டுக் கெட்டு நிற்கிறது. கருணாநிதியும், ஜெயலலிதாவும் நம்மை அடிமைப்படுத்த நினைக்கின்றனர்.
ஆட்சியில் இருக்கும் போது மதுவிலக்கை பற்றி வாய் திறக்காத ஜெயலலிதா மக்களிடம் வாக்கு கேட்க வரும் போது மதுவிலக்கை படிப்படியாக குறைப்பதாக கூறுகிறார். முதலில் அந்த இரண்டு தலைவர்களுக்கும் சொந்தமான மது ஆலைகளை மூடட்டும். காமராஜர் காலத்தில் உண்மையும், நேர்மையும் நிறைந்த எளிமையான ஆட்சி நடைபெற்றது.
ஊழல், லஞ்சம், மதுவை ஒழிப்பதாக சொல்கிறார்கள். மக்கள் அவர்களையே ஆட்சியை விட்டு ஒழிக்க வேண்டும். உண்மையான,நேர்மையான ஆட்சியை நிறுவ உங்கள் பிள்ளைகள் துடிக்கிறோம் பலமுறை அ.தி.மு.க.- தி.மு.க. விற்கு வாக்களித்து அதிகாரத்தை கொடுத்து விட்டீர்கள். மறுபடியும் நீங்கள் ஜெயலலிதாவுக்கோ, கருணாநிதிக்கோ வாக்களித்து அதிகாரத்தை கொடுக்காதீர்கள். பணத்தை கொடுத்து வாக்கை பறிக்கலாம் என்று இந்த ஆட்சியாளர்கள் நினைக்கின்றனர். இது தேர்தல் அல்ல. மாறுதலுக்கான புரட்சிக்கான களம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு சீமான் பேசினார்.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது?












Click it and Unblock the Notifications