தனுஷுக்கு பதில் ஜி.வி.பிரகாஷிடம் 'கோப'த்தை காட்ட வரும் சீமான்!

Subscribe to Oneindia Tamil

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், மீண்டும் தீவிரமாக சினிமாவில் இயங்கத் திட்டமிட்டுள்ளார். அடுத்தடுத்து இரண்டு படங்களை இயக்கப் போகிறாராம்.ய

விஜய் ஆன்டனியை வைத்து பகலவன் படத்தை இயக்கும் வேலைகளை ஆரம்பித்துள்ள சீமான், தனது அடுத்த கதையான கோபம் படத்துக்கும் ஹீரோ பிடித்துவிட்டார்.

தனுஷுக்கு பதில் ஜிவி

தனுஷுக்கு பதில் ஜிவி

இந்தக் கதையை அவர் தனுஷுக்காக எழுதியதாகக் கூறப்படுவதுண்டு. ஆனால் தனுஷ் நடிக்காத நிலையில், இப்போது ஜிவி பிரகாஷிடம் பேசியுள்ளார்.

இசைத் தம்பிதான் வருகிற எந்த வாய்ப்பையும் மறுக்காமல் ஏற்பவர் ஆயிற்றே... அதுவும் சீமானின் இந்தக் கதை ரொம்பவே பவர்ஃபுல்லானது என பரவலாகப் பேசப்பட்டது.

கோபம்

கோபம்

இந்தப் படத்துக்கு கோபம் என்று, கதையை உருவாக்கும்போதே தலைப்பு வைத்துவிட்டார் சீமான். அதே தலைப்பில்தான் படம் உருவாகப் போகிறது.

கதாநாயகி, மற்ற காதாபாத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் நடைபெற்று வருகிறது.

7 ஆண்டுகளுக்குப் பிறகு

7 ஆண்டுகளுக்குப் பிறகு

சீமான் கடைசியாக இயக்கிய படம் வாழ்த்துகள் (2010). அதன் பிறகு விஜய்யை வைத்து பகலவன் இயக்கும் வேலைகள் தீவிரமாக இருந்தபோது, இறையாண்மைக்கு எதிராகப் பேசிய வழக்கில் கைதாகி சிறைக்குப் போய்விட்டார். அந்தப் படத்தில் நடிப்பதிலிருந்து விஜய் விலகிக் கொண்டார். சிம்பு, ஜெயம் ரவி என நிறைய ஹீரோக்கள் மாறி, இப்போது விஜய் ஆன்டனியில் வந்து நிற்கிறது. கலைப்புலி தாணுதான் படத்தைத் தயாரிக்கிறார்.

பிஸி ஜிவி

பிஸி ஜிவி

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் நாச்சியார், அடங்காதே, ஐங்கரன், செம, குப்பத்துராஜா, 4ஜி, 100 % லவ் ஆகிய படங்களில் நடிக்கிறார்.

கோபம் படத் தயாரிப்பாளர், மற்ற கலைஞர்கள் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+