உங்கள் ஓட்டு "தர்மயுத்த" நாயகனுக்கே... செல்லூராரின் குசும்பை பாருங்க!
வேட்பாளர் மதுசூதனனை தர்மயுத்த நாயகன் என்ற புகழாரம் சூட்டினார் அமைச்சர் செல்லூர் ராஜூ.
சென்னை: வேட்பாளர் மதுசூதனனை தர்மயுத்த நாயகன் என்றும், ஜெயலலிதாவின் முரட்டுபக்தன் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
இரட்டை இலை கிடைத்த கையோடு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக சந்திக்கிறது. இந்த தேர்தலில் கட்டாயம் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நிலைக்கு அதிமுக தள்ளப்பட்டுள்ளது.

இது அக்கட்சி கௌரவப் பிரச்சினையாகவே பார்க்கிறது. மேலும் மக்களின் நாடித் துடிப்பை அறியும் தேர்தலாகவும் இது பாவிக்கப்படுகிறது. இந்நிலையில் மதுசூதனனை ஆதரித்து முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என அனைவரும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதுபோல் இன்று ஆர்.கே.நகர் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் அமைச்சர் செல்லூர் ராஜூ பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறுகையில் இந்த இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் மதுசூதனன் நிச்சயம் வெற்றி பெறுவார்.
எனவே வாக்காள பெருமக்களாகிய நீங்கள் ஜெயலலிதாவின் முரட்டு பக்தன், தர்மயுத்த நாயகன் மதுசூதனனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.
அதிமுக இரண்டாக பிளவுப்பட்ட போது எடப்பாடி அணிக்கு எதிராக செயல்படும் போதெல்லாம் ஓபிஎஸ் அடிக்கடி பயன்படுத்திய வார்த்தை தர்மயுத்தம் ஆகும். அந்த அணியில் இருந்தவர்தான் மதுசூதனன் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications