திமுகவினருக்கு பெரியார் தந்த பட்டம்தான் விலைமாது மகன்.. ஆ.ராசாவுக்கு எச்.ராஜா பதில்

Subscribe to Oneindia Tamil

காரைக்குடி: திராவிடர் கழகத்தில் வெளியேறி திமுகவை உருவாக்கியவர்களுக்கு பெரியார் தந்த பட்டம்தான் விலைமாது மகன்; அதை 100 கோடி இந்துக்களுக்கு சூட்டுவதற்கு ஆ.ராசா யார்? என்று மூத்த பாஜக தலைவர் எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மூத்த திமுக தலைவர் ஆ.ராசா, ஹிந்துவாக இருக்கிற வரை நீ சூத்திரன்; சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன்; ஹிந்துவாக இருக்கிற வரை நீ பஞ்சமன்; ஹிந்துவாக இருக்கிற வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள் என்கின்ற கேள்வியை உரக்க சொன்னால் தான் அது சநாதனத்தை முறியடிக்கின்ற அடிநாதமாக அமையும் என்பதை விடுதலையும், முரசொலியும், திராவிட முன்னேற்ற கழகமும், திராவிடர் கழகமும் எடுக்க வேண்டிய காலம் வந்து விட்டது என்றார். அவரது இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

மத்திய அரசின் திட்டம்

மத்திய அரசின் திட்டம்

இந்நிலையில் காரைக்குடியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆ.ராசாவுக்கு பதிலளித்து எச்.ராஜா பேசியதாவது: காலம் போதாதா காலம்.. தமிழ்நாட்டுக்கும் போதாத காலம்.. எனக்கும் இப்போது போதாத காலம். நான் இந்த கூட்ட நேரத்தைச் சொல்கிறேன். தமிழகம் இப்போது திவாலாகிப் போன மாநிலம். எல்லா திட்டங்களும் மத்திய அரசாங்கத்தின் திட்டங்கள்; இந்த திட்டங்கள்தான் செயல்பாட்டில் உள்ளன.

உதயநிதி மீது அட்டாக்

உதயநிதி மீது அட்டாக்

எய்ம்ஸில் கூட ஒரு கல்லை திருடிடுன்னு ஓடிப் போன பயலை காணோம்.. ஆனால் விரைவிலேயே அது கட்டி முடிய இருக்கிறது. மாணவர் எண்ணிக்கை 250 ஆகி இருக்கிறது என ஜேபி நட்டா தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் வெறும் விபச்சாரி மகன்னா பேச்சு ஓடிடுண்ணு இருக்கு. அதைப்பத்தி பேசலியே ராஜான்னு நினைப்பீங்க... அதாவது ஸ்டாலின் ஆட்சியைக் கவிழ்ப்பது; இல்லை திமுகவை உடைக்கலைன்னா திமுகவை ஒழிக்கனும்ங்கிற ஒரே குறிக்கோளுடன் இந்த ஆண்டிமுத்து ராசா, ஆபாச ராசா செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். தயவு செய்து யாரும் ராஜான்னு சொல்லாதீங்க.. ராஜான்னு சொன்னா நானு.. ஏன்னா நான் மேடைக்கு வரும் போது ராஜா கைதாவார்.. ராஜா கைதாவாருன்னு கரு.நாகராஜன் பேசினார். எனக்கு எதிராக 26 பொய் வழக்கு போட்டிருக்காங்க..அந்த 26ஐயும் நான் ஸ்டே பண்ணிட்டேன். அதனால அது நடக்காது.

அமைச்சர் நாசர் மீது பாய்ச்சல்

அமைச்சர் நாசர் மீது பாய்ச்சல்

ஆபாச ராசா- ஆண்டிமுத்து ராசா ஏன் இதை இன்னைக்குப் பேசனும். தமிழக மக்கள் இந்த செயல்படாத திமுக அரசு மீது கோபத்தில் இருக்கிறார்கள். ஏனென்றால் ரூ15,000 கோடி மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதே மாதிரியா வீட்டு வரி 150% உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் பால் பொருட்கள்.. தயிர், மோர் எல்லாவிலையையும் கூட்டி இருக்கான். அதுலயம் நாசர் என்ன சொல்றாப்ள. . பால் எல்லாம் ஹலால் பாலாக இருக்குமாம்.. ஹலால் முத்திரை இருந்தால் ஆவினை நாம் பகிஷ்காரம் செய்வோம் என இந்த இடத்துல கேட்டுக்கிறேன். யார் நீ? உன் மதத்தை வீட்டில் வைத்து கொள் நாசர்.

பெரியார் தந்த பட்டம்

பெரியார் தந்த பட்டம்

மக்களின் இந்த விரக்தியை திசைதிருப்புவதற்காக, இந்துக்கள் எல்லாரும் விபச்சாரிகள் மகன்னு சொல்றாங்க.. திமுகவைத்தான் பெரியார் அப்படி சொன்னார். கிழவனுக்கு இளம்பெண் கேட்கிறதா? ஊஞ்சலாடுகிறதா? முதலிரவா? என்றெல்லாம் பெரியாரை கேள்வி கேட்டும் ஏசியும் பேசியும் திகவில் இருந்து அண்ணாதுரையும் கருணாநிதியும் மற்றவர்களும் வெளியே வந்தார்கள். அன்றைக்கு உங்களுக்கு பெரியார் கொடுத்த பெயரை இந்த 100 கோடி இந்துக்களுக்கு கொடுக்க நீ யார்னு இந்த ஆண்டிமுத்து ராசா, ஆபாச ராசாவை கேட்கிறேன். அன்றைக்கு உங்களை வேசிமகன்கள் என்று; திகவில் இருந்து என்னைவிட்டு வெளியேறியவர்கள் வேசி மகன்கள் என்று பெரியார் உங்களுக்கு கொடுத்த பெயரை நீங்கள் எப்படி இந்துக்களுக்கு கொடுக்க முடியும்? இவ்வாறு எச்.ராஜா பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+