மூத்த பத்திரிகையாளர் சமூக செயற்பாட்டாளர் நீலப் மிஸ்ரா சென்னையில் காலமானார்
மூத்த பத்திரிகையாளர் நீலப் மிஸ்ரா சென்னையில் காலமானார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: மூத்த பத்திரிகையாளரும் சமூக செயற்பாட்டாளருமான நீலப் மிஸ்ரா சென்னையில் உடல்நலக் குறைவால் காலமானார்.
காங்கிரஸ் கட்சியின் நேஷனல் ஹெரால்டு ஆங்கில பத்திரிகையாளர் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர் நீலப் மிஸ்ரா. 1988-91 கால கட்டத்தில் பீகார் மாநில பியூசிஎல் செயலாளராகவும் பணியாற்றினார்.

அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நீலப் மிஸ்ரா அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று மருத்துவமனையிலேயே நீலப் மிஸ்ரா காலமானார்.
நீலப் மிஸ்ரா மறைவுக்கு பீகார் பத்திரிகையாளர்கள் சங்கங்கள் இரங்கல் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications