தீவிரவாதிகளுடனான மோதலில் வீரமரணமடைந்த ராணுவ வீரர் இளையராஜா உடல் சொந்த ஊரில் அடக்கம்!
காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் இளையராஜாவின் உடல் சொந்த ஊர் கொண்டு வரப்பட்டது.
மதுரை : காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிவகங்கையை சேர்ந்த இளையராஜாவின் உடல் அவரது ஊர் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் தெற்கு காஷ்மீர் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்புப் பணியில் இருந்த தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் இளையராஜா வீரமரணமடைந்தார். சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் கண்டனி கிராமத்தை சேர்ந்த பெரியசாமி என்பவரின் மகன் இளையராஜா 19வது மகாரெஜிமெண்ட் படைப்பிரிவில் ராணுவ வீரராக செயல்பட்டு வந்தார்.

கடந்த 12ம் தேதி நடந்த தீவிரவாத தாக்குதலின் போது உயிரிழந்த இளையராஜாவின் உடல் இன்று முழு ராணுவ மரியாதையுடன் மதுரை விமான நிலையம் வந்தது. அங்கு மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் ராணுவ வீரர் இளையராஜா உடலுக்கு மலரஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து இளையராஜாவின் உடல் அவரது சொந்த ஊரான கண்டனிக்கு கொண்டு வரப்பட்டது.
இளையராஜாவின் உடலைப் பார்த்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர் கதறி அழுதனர். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த ராணுவ வீரர் இளையராஜாவின் முழு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இளையராஜாவின் மனைவி 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். அவரை நினைத்து அந்த ஊர் மக்களே கண்ணீர் வடிக்கின்றனர். சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த இளையராஜா ராணுவத்தில் சேர்ந்தது நாட்டிற்காக சேவையாற்றினார்.
இதனிடையே இளையராஜா வீர மரணமடைந்ததற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அவரது குடும்பத்தாருக்கு ரூ. 20 லட்சம் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications