சிபிஐ வழக்கிலிருந்து விடுவிக்க கார்த்தி சிதம்பரம் மனு.. விசாரிக்க மறுத்த சென்னை ஹைகோர்ட்!
சென்னை: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கை ரத்து செய்ய கோரும் கார்த்தி சிதம்பரம் மனுவை விசாரிக்க மறுத்த சென்னை ஹைகோர்ட், இது தொடர்பாக அவர் டெல்லி கோர்ட்டை அணுக வேண்டும் என கூறியுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திடமிருந்து லஞ்சம் பெற்றதாக கூறி சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார் கார்த்தி. ஆனால் இது தங்கள் விசாரணை வரம்புக்குள் வராது என ஹைகோர்ட் கூறியதோடு, டெல்லி பட்டியாலா கோர்ட்டை அணுகுமாறு கார்த்தி சிதம்பரத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
ஆகஸ்ட் 23ம் தேதி சிபிஐயிடம் ஆஜராகி விளக்கம் அளிக்க கார்த்தி சிதம்பரத்திற்கு சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டது. மேலும் கார்த்தி சிதம்பரத்திற்கு எதிரான லுக்அவுட் நோட்டீசுக்கு சென்னை ஹைகோர்ட் இடைக்கால தடை விதித்ததையும் நீக்கியது சுப்ரீம் கோர்ட்.
சிபிஐ முன்னிலையில் ஆஜராவதை ஏன் தவிர்க்கிறீர்கள் என்று கார்த்தி சிதம்பரத்திடம் சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியிருந்தது. இந்த நிலையில் சென்னை ஹைகோர்ட் இந்த வழக்கை எடுக்க மறுத்துள்ளது கார்த்திக்கு சட்ட ரீதியில் மற்றொரு பின்னடைவாக அமைந்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications