ஜெயலலிதா மறைவுக்கு மொட்டை அடித்து அஞ்சலி செலுத்திய தேமுதிக பிரமுகர்
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவை அடுத்து அதிமுக தொண்டர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
நெல்லை: முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பல்வேறு விதங்களில் மக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதல் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு காலமானார்.

ஜெயலலிதா மறைவு செய்தி அறிந்த அதிமுக தொண்டர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். அவரது உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி ஹாலில் ஏராளமானோர் திரண்டு வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து மாலையில் அவரது உடல் எம்ஜிஆர் சமாதி அமைந்துள்ள பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஜெயலலிதாவின் புகைப்படத்துக்கு மாலை அணிவித்து அதிமுகவினர் மற்றும் பொது மக்கள் கட்சி பாகுபாடுன்றி அஞ்சலி செலுத்தினர். மதுரை மாவட்டம் மேலூர், கீழவளவு, தெற்குப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. சிவகாசி, தேனி, கிருஷ்ணகிரி ஆகிய இடங்களிலும் அஞ்சலி செலுத்தினர்.
கோவை காந்திபுரம் பகுதியில் ஏராளமானோர் ஒரே இடத்தில் திரண்டு மறைந்த ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தினர். சவுரிபாளையம் பகுதியில் 50க்கும் மேற்பட்டவர்கள் மொட்டை அடித்து தங்கள் துக்கத்தை வெளிப்படுத்தினர்.
நத்தம் நெச்சி ஓடைபட்டியில் 50க்கும் மேற்பட்ட ஆண்கள் மொட்டை அடித்தும் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஜெயலலிதாவின் படத்திற்கு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதனிடையே நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம், சுரண்டை பகுதியில் அதிமுகவினர் மொட்டை அடித்து அஞ்சலி செலுத்தினர். அதேபோல் நெல்லை, பேட்டை காவல் நிலையம் அருகே அதிமுகவினர் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு அஞ்சலி செலுத்தினர். இதில் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டு மொட்டை அடித்து துக்கத்தை வெளிப்படுத்தினர். அப்போது அங்கிருந்த தேமுதிக பிரமுகர் சிறுத்தை முருகன் என்பவரும் மொட்டையடித்து அஞ்சலி செலுத்தினார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications