வனக்காவலர்களை தாக்கியவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.. திருவண்ணாமலை கலெக்டர் உறுதி
செங்கத்தில் வனக்காவலர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
Recommended Video

திருவண்ணாமலை: செங்கத்தில் வனக்காவலர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த மேல்புழுதிப்பூரில் வனத்துறையினர் தாக்கியதில் திருமலை என்பவர் உயிரிழந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. சந்தாகவுண்டன்புதூர் வனப்பகுதியில் மாட்டுவண்டியில் மணல் ஏற்றி வந்த திருமலை என்பவர் மர்மமாக இருந்து கிடந்தார்.

இதனைக்கண்ட உறவினர்கள் வனத்துறையினரால் திருமலை அடித்துக்கொல்லப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் அடைந்தனர். மேலும் திருமலை சாவுக்கு காரணமான வனத்துறை அதிகாரிகளையும் கிராம மக்கள் தாக்கினர்.
இதில் வனத்துறை அதிகாரி தாண்டவராயன் படுகாயம் அடைந்தார். இதனை அடுத்து வனத்துறையினருக்கு சொந்தமான இருசக்கர வாகனங்களுக்கு பொதுமக்கள் தீ வைத்தனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இதுதொடர்பாக பேசிய மாவட்ட ஆட்சியர் கந்தசாமி செங்கத்தில் வனக்காவலர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
வனக்காவலரை தாக்கியபோது உடனிருந்த 2 பேர் தலைமறைவு ஆகிவிட்டதாக கூறிய கலெக்டர் இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றும் எச்சரித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications