ஐபிஎல்-க்கு எதிராக சென்னை அண்ணாசாலையில் பிரமாண்ட புரட்சி... அணி அணியாக பல்லாயிரம் பேர் கைது!
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணா சாலை முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
Recommended Video

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணா சாலை முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. எங்கு பார்த்தாலும் மறியல் போராட்டம் என அணி அணியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிராஜா, சீமான், கருணாஸ், அமீர் , தங்கர்பச்சான் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

காவிரி வாரியம் தொடர்பான பிரச்சினை கொழுந்து விட்டு எரியும் நிலையில் ஐபிஎல் போட்டிகளுக்கு அனுமதி கூடாது என்று கோரிக்கை எழுந்தது. எனினும் திட்டமிட்டபடி போட்டிகள் நடப்பதற்கான நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதையடுத்து ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணா சாலை முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமை கட்சிகள், எஸ்டிபிஐ, நாம் தமிழர் கட்சியினர் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை அண்ணா சாலையில் மாற்றுத் திறனாளிகள் சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு மறியல் போராட்டம் நடத்த வருகின்றனர். அண்ணா சாலையிலிருந்து கிரிக்கெட் மைதானம் செல்லும் பாதை வரை போராட்டங்கள் நடைபெறுகின்றன.

ரசிகர்களுக்கு 6 மணி வரை மட்டுமே மைதானத்துக்குள் அனுமதி என்பதால் அவர்கள் மைதானத்தை நோக்கி வருவதில் சிக்கல் எழுந்துள்ளது. மேலும் அவர்களுக்கு வாலாஜா சாலை வழியாக மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Huge protest for #CauveryManagementBoard #CauveryIssue #IPL2018 #ChennaiSuperKings #Chennai #ChepaukStadium #chepauk pic.twitter.com/qUrL6Zqml9
— Abinesh Arjunan (@The_Abinesh) April 10, 2018
அண்ணா சாலையில் அணி அணியாக திரளும் கட்சிகள், இயக்கங்களால் அண்ணாசாலை, வாலஜா சாலை, சேப்பாக்கம் போர்க்களமாக காட்சியளிக்கிறது. இதில் அணி அணியாக கைது நடவடிக்கைகளும் நடத்தப்படுகின்றன. ரஜினி ரசிகர்களும் ஐபிஎல்லு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரசிகர்களுக்கு கருப்பு பேட்ஜை விநியோகம் செய்யப்பட்டு வருகின்றனர். மோடியின் உருவபொம்மையை எரித்தும் போராட்டம் நடத்தப்பட்டது. மேலும் ஐபிஎல் போட்டி டிக்கெட்டுகளும் எரிக்கப்பட்டன. அண்ணா சாலையின் 4 புறங்களில் இருந்தும் போராட்டக்காரர்கள் குவிவதால் போலீஸார் திணறி வருகின்றனர்.
ரசிகர்கள் யார் போராட்டக்காரர்கள் யார் என்று தெரியாமல் போலீஸார் உள்ளனர். சீமான், கருணாஸ் , சினிமா இயக்குநர்கள் வெற்றிமாறன், பாரதிராஜா, அமீர், தங்கர்பச்சான் உள்ளிட்ட போராட்டத்தில் நடத்தினர். அப்போது தடுப்புகளை தாண்டி சென்ற போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. இந்நிலையில் சீமான், கருணாஸ் , சினிமா இயக்குநர்கள் வெற்றிமாறன், பாரதிராஜா, அமீர், தங்கர்பச்சான் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications