நாட்டரசன் கோட்டை நகரத்தாரின் செவ்வாய் பொங்கல்: வெளிநாட்டினர் பங்கேற்பு
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையில் நகரத்தார் சமூகத்தினரின் செவ்வாய் பொங்கல் விழா நேற்று மாலை வெகு சிறப்பாக நடந்தது. இதில், சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் இந்திய பெரு நகரங்களில் வசித்து வரும் நகரத்தார்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
நாட்டரசன் கோட்டையில் நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் வசித்து வந்தனர். ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட நகரத்தார் செட்டியார் சமூகத்தைச் சேர்ந்த இவர்கள் வணிகம் செய்வதில் கை தேர்ந்தவர்களாக இருந்தனர். நாளடைவில் வணிகத்தில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டனர்.

துபாய், மலேசியா, சிங்கப்பூர், சவூதி அரேபியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், சென்னை, மதுரை, கோவை போன்ற வெளிமாவட்டங்களுக்கும் சென்றுவிட்டனர்.
பலரும் வெளியேறி விட்டாலும் ஒவ்வொரு வருடமும் தை மாத முதல் செவ்வாய்கிழமை அன்று சொந்த ஊர் வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். வருடத்தில் தை மாதம் வரும் முதல் செவ்வாய் கிழமை நாட்டரசன் கோட்டை கண்ணாத்தாள் கோயிலில் பொங்கல் வைத்து வழிபட்டு அனைத்து குடும்பத்தினரும் இணைந்து சாமி கும்பிடுவது வழக்கம்.

செவ்வாய் பொங்கல்
செவ்வாய் பொங்கல் என அழைக்கப்படும் இந்த நாளில் உறவுகள் ஒன்று கூடுவது மட்டுமல்லாது நகரத்தார் சமுதாயத்தில் உள்ள இளைஞர்கள், இளம் பெண்களுக்கும் திருமணம் பேசி முடிப்பதும் உண்டு. எனவே வெளிநாடுகளில் வசிக்கும் நகரத்தார் குடும்பத்தினரும் செவ்வாய் பொங்கலில் தவறாது கலந்து கொள்கின்றனர்.
முதல் மரியாததை
ஒரு குடும்பத்திற்கு ஒரு புள்ளி என வழங்கப்படுகிறது. தை முதல் செவ்வாய்கிழமைக்கு முந்தைய நாளில் அனைத்து புள்ளிகளின் பெயர்களை ஒரு சீட்டில் எழுதி குடத்தில் போட்டு குலுக்குவார்கள். அதில் வரும் ஒரே ஒரு நபருக்கு முன்னுரிமை தந்து முதல் பொங்கல் வைக்க உரிமை தருவார்கள்.

முதல் பொங்கல்
முதல் பொங்கல் வைப்பவர்கள் மண்பானையில் கோயில் முன்புறம் உள்ள மைதானத்தில் வைப்பார்கள்.அவர்களுக்கு மற்றவர்கள் சேர்ந்து முதல் மரியாதை வழங்குகின்றனர். அவர்களது பொங்கல் பானையில் அனைவரும் சேர்ந்து பால் ஊற்றி பொங்கல் வைபவத்தை தொடங்குகின்றனர்.
கண்ணாத்தாள் கோவில்
இந்தாண்டு மொத்தம் 900 புள்ளிகளின் பெயர்கள் எழுதி சீட்டு குலுக்கினர். இதில் தற்போது சிங்கப்பூரில் வசிக்கும் லக்குமண செட்டியார் பெயர் வந்ததை அடுத்து அவருக்கு முதல் மரியாதை வழங்கப்பட்டது. நேற்று மாலை 5 மணிக்கு கோயில் வாசலில் லக்குமண செட்டியார் தனது குடும்பத்தினருடன் பொங்கல் வைத்து கண்ணாத்தாளை வழிபட்டார்.
900 பொங்கல் பானைகள்
இதனைத் தொடர்ந்து கோயில் முன்புறம் உள்ள மைதானத்தில் நகரத்தார் சமூகத்தினர் 900 பேர் ஒரே நேரத்தில் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். நள்ளிரவு கிடாவெட்டு விருந்து வைபவம் நடைபெற்றது.
வெளிநாட்டினர் வருகை
பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மன், ஆஸ்திரேலியாவில் இருந்து சுற்றுலா பயணிகள் இவ்விழாவுக்கு வந்தனர். அவர்களுக்கு கரகாட்டம் ஆடி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வெளிநாட்டு பயணிகளும் கரகாட்டம் ஆடினர். இத்தாலி மாணவர் லியோ, பொங்கல் விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சியளிப்பதாக கூறினார். அனைவரும் ஒன்று கூடி விழா நடத்துவதை நான் பார்த்தது இல்லை. இதை ஆச்சரியமாக பார்க்கிறேன். இவ்விழாவில் மாப்பிள்ளை, பெண் தேடும் தமிழ் கலாசாரம் பாராட்டுக்குரியது, என்றார்.
150 ஆண்டுகால பாரம்பரியம்
சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில், நகரத்தார் சமூகத்தினரால் பின்பற்றப்படும், "செவ்வாய் பொங்கல்' விழா 150 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. உறவுகளை வலுப்படுத்தவும் புதிய உறவுகளை உருவாக்கவும் இந்த பொங்கல் விழா பாரம்பரியமாக கொண்டாடப்படுவதாக நகரத்தார் சமுதாயத்தினர் தெரிவித்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications