செத்தும் கொடுத்த வள்ளல் சீதக்காதியை போல்.. உடல் உறுப்பு தானத்தால் 7 பேருக்கு வாழ்வளித்த சண்முகதுரை!
நெல்லை: செத்தும் கொடுத்த வள்ளல் சீதக்காதியை போல், உடல் உறுப்புகள் தானத்தால் மரணத்திற்கு பிறகும் 7 பேருக்கு வாழ்வளித்துள்ளார் தென்காசியை சேர்ந்த சண்முகதுரை.
விபத்தில் சிக்கி மூளைச்சாவு: தென்காசி மாவட்டம் சிவகரி பகுதியை சேர்ந்தவர் சண்முகதுரை. 52 வயதான இவர் டூவிலரில் சென்ற போது விபத்தில் சிக்கி நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனிடையே சண்முகதுரை மூளைச்சாவு அடைந்ததால், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன் வந்தனர். அதைத் தொடர்ந்து சண்முகதுரையின் உடலில் இருந்து நுரையீரல், கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், மற்றும் கருவிழிகள் என முக்கிய உறுப்புகள் இன்று காலை எடுக்கப்பட்டன.

உடல் உறுப்புகள்: அதனை மருத்துவ முறைப்படி முறையாக சென்னை, மதுரை, உள்ளிட்ட ஊர்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு அதிவேகமாக அனுப்பி வைக்கப்பட்டன. சண்முகதுரையின் நுரையீரலானது சென்னை காவேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதேபோல் கல்லீரல் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு அனுப்பி வைகப்பட்டது. இரண்டு சிறுநீரகங்களில் ஒரு சிறுநீரகம் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் நெல்லை அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனைக்கும் கொடுக்கப்பட்டது. இதயம் எந்த மருத்துவமனைக்கு கொடுக்கப்பட்டது என்ற விவரம் இல்லை.
கருவிழிகள்: இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் வரிசையில் கருவிழிகளும் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரிக்கு கொடுக்கப்பட்டது. இதன் மூலம் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்த 4 பேருக்கு இறந்தும் வாழ்வு கொடுத்திருக்கிறார் சண்முகதுரை. இதனிடையே உடல் உறுப்புகளை தானம் செய்த சண்முகதுரைக்கு அரசு சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. உடல் உறுப்புகள் தானம் குறித்து அரசு பல்வேறு கட்டங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதன் பலனாக முன்பைக் காட்டிலும் இப்போது உடல் உறுப்பு தானம் செய்ய முன் வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
7 பேருக்கு மறுவாழ்வு: இதயம், நுரையீரல், கல்லீரல், 2 சிறுநீரகங்கள், 2 கருவிழிகள் என மொத்த 7 உறுப்புகளை தானமாக கொடுத்து 7 பேரின் குடும்பத்தினருக்கு பெரும் உதவியை செய்திருக்கிறார் சண்முகதுரை.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications