இப்படி கண்டுகொள்ளாமல் இருக்கிறதே நடிகர் சங்கம்.. சிவாஜி மன்றம் கொதிப்பு

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன், மகாகவி பாரதியார், கொடிகாத்த குமரன், பகத்சிங் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை நம் கண்முன் நிறுத்தி இந்திய மக்களுக்கு நாட்டுப் பற்றினை ஊட்டியர் பத்மஸ்ரீ சிவாஜி கணேசன். திருவிளையாடல், திருவருட்செல்வர், திருமால்பெருமை போன்ற படங்களின் மூலம் நமக்கெல்லாம் பக்தி உணர்வை உருவாக்கியவர் செவாலியே சிவாஜி கணேசன் ஆவார்.
சிவாஜி கணேசனின் படங்களும் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷ பெட்டகம். என்றைக்கோ அவருக்கு மணிமண்டபம் எழுப்பி திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கும், வளரும் கலைஞர்களுக்கும் வழிகாட்டும் கலைக்கூடமாக மணிமண்டபம் திகழச் செய்திருக்க வேண்டும்.
இந்த ஒப்பற்ற பிறவிக் கலைஞனுக்கு தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஒன்றுகூடி இந்தியாவின் தலைசிறந்த விருதான பாரத ரத்னா விருதுக்கு பரிந்துரைத்து, பெற்றுத் தந்திருக்க வேண்டும். வருடந்தோறும் இவர் பிறந்த அக்டோபர் ஒன்றாம் தேதியில் அரசு சார்பில் அவர் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை ஏற்பாடு செய்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் தமிழுக்கும், தமிழர்க்கும் மிகப்பெரிய கவுரவமாக அது அமைந்திருக்கும்.
ஆனால் தற்போது சிவாஜி கணேசன் சிலை அமைந்திருக்கும் இடம் பற்றி பிரச்சனை எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் நடிகர் சங்கத்தினர் மவுனமாக இருப்பது சிவாஜி பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்துவதாக உள்ளது.
இந்த நிலையை போக்க காங்கிரஸ் தொண்டர்களையும், சிவாஜி ரசிகர்களையும், சிவாஜி மன்றத்தினரையும் ஒன்று திரட்டி மிக விரைவில் நடிகர் சங்கத்தின் கண்டுகொள்ளாத போக்கினை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திடுவோம் என்று ஜோதி சாடியுள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications