நீலகிரி மாவட்டத்தில் முழு கடையடைப்பு போராட்டம்! சாலைகள் வெறிச்! ஏன் என்னாச்சு!
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் இன்றைய தினம் வணிகர் சங்கங்கள் முழு கடையடைப்பு போராட்டத்தை நடத்துகிறார்கள்.
நீலகிரியில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தடுக்க அந்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னை உயர்நீதிமன்றம் 2019ஆம் ஆண்டு மே மாதம் வெளியான தீர்ப்பில் நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்டுள்ள குளிர்பானங்கள், பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்டுள்ள உணவு பொருட்கள பயன்படுத்த தடை விதித்துள்ளது.

அரசாணை நிலை எண் 84 இன்படி , 2018ஆம் ஆண்டில் ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தமிழகம் முழுவதும் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை தடைவிதித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக நீலகிரி மாவட்டத்தில் தொடர் பிளாஸ்டிக் ஒழிப்பு பணிகள் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்சமயம் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நீலகிரி மாவட்டத்திற்குள் நுழையும் அனைத்து அரசு மற்றும் தனியார் வாகனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாததை உறுதி செய்யும் பொருட்டு அனைத்து வாகனங்களும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.
மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் நீலகிரி மாவட்டத்திற்குள் பயன்படுத்துவதையும், விற்பனை செய்வதையும், கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டு, தொடர் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தும், பயன்படுத்துவோர் மீது அபராதம் விதிக்கப்பட்டும் வருகிறது.
பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் வணிகர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை கண்டித்து நீலகிரி மாவட்டத்தில் வணிகர்கள் இன்று முழு கடையடைப்பு போராட்டத்தை நடத்துகிறார்கள். அடுத்த மாதமும் நீலகிரியில் 10 ஆயிரம் வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.
இன்று நடக்கும் இந்த கடையடைப்பை அடுத்து நீலகிரி மாவட்டத்தில் கடைகள் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்களை சிலர் நேற்றே வாங்கி வைத்துக் கொண்டனர். கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் அங்கு பொருட்களை வாங்க முடியாமல் சுற்றுலா பயணிகளும் அவதிப்படுகிறார்கள். மேலும் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
பலர் ஊட்டியிலிருந்து இறங்கி வந்து மேட்டுப்பாளையத்தில் பொருட்களை வாங்கிச் செல்கிறார்கள். நீலகிரி மாவட்டம் காடுகள் நிறைந்த பகுதி. இங்கு அரிய வகை விலங்குகள், பறவைகள், உயிரினங்கள் உள்ளன. பிளாஸ்டிக் பயன்பாட்டால் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைகிறது. மேலும் அந்த பிளாஸ்டிக்குகளை விலங்குகள் பயன்படுத்தினால் அதன் உயிருக்கே ஆபத்தாகிவிடும்.
இனி கோடை காலம் தொடங்கவுள்ள நிலையில் காடுகளில் தண்ணீர், உணவு கிடைக்காமல் விலங்குகள் ஊருக்குள் வரத் தொடங்கும். அப்போது இந்த பிளாஸ்டிக் பொருட்களை உணவு பொருட்கள் என நினைத்து சாப்பிட்டால் அது தொண்டையில் சிக்கி பெரும் ஆபத்தை ஏற்படுத்துகிறது. மேலும் மண்ணில் புதையும் பிளாஸ்டிக்குகளால் நிலத்தடி நீர் மட்டத்திற்கும் ஆபத்து இருக்கிறது என்பதால்தான் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications