திண்டுக்கல் அருகே டாஸ்மாக் பாரில் ரகளை: தடுக்கச் சென்ற எஸ்.ஐ-க்கு கத்திக்குத்து
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே அரசு மதுபானக் கடையில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டவர்களை பிடிக்கச் சென்ற சிறப்பு உதவி ஆய்வாளரை சிலர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் மாணிக்கம். இவர் இன்று வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் அதிகாரிபட்டியில் உள்ள டாஸ்மாக் பாரில் சிலர் மது அருந்திவிட்டு தகராறு செய்து கொண்டிருப்பதாக சாணார்பட்டி காவல்நிலையத்திற்கு புகார் வந்தது.

இதையடுத்து அங்கு சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் மாணிக்கம் தகராறில் ஈடுபட்டிருந்தவர்களை பிடிக்க முயன்றுள்ளார். அப்போது குடிபோதையில் இருந்த சிலர் பயங்கர ஆயுதங்களுடன் மாணிக்கத்தை தாக்கியுள்ளனர். தாக்குதலில் படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார்.
தகவல் அறிந்த ஊர் மக்கள் அங்கிருந்து மீட்டு திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனை அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சாணார்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
ரூ.10375 தான் சம்பளம்: டாஸ்மாக் ஊழியர் அமைச்சர் முஸ்தபாவிடம் பேசிய வீடியோ.. எதார்த்தம் என்ன -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications