சித்த மருத்துவ கல்லூரியில் பொங்கல் கொண்டாட்டம் - மாணவிகள் கலக்கல்
நெல்லை: நெல்லையில் அரசு சித்த மருத்துவ கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரியில் பொங்கல் விழா நடந்தது.
தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று பொங்கல். இதற்கு இன்னும் 3 நாளே உள்ள நிலையில் பல்வேறு இடங்களிலும் சமத்துவ பொங்கல் விழா களை கட்ட துவங்கி விட்டது. இதன் ஒரு பகுதியாக பல்வேறு இடங்களில் கல்லூரிகளில் பொங்கல் விழா நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நெல்லை சித்த மருத்துவ கல்லூரியில் பொங்கல் விழாவை கல்லூரி முதல்வர் சவுந்திரராஜன் துவங்கி வைத்தார். துணை முதல்வர் உள்பட கல்லூரி பேராசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இதற்காக கல்லூரி வாளகத்தில் தோரணம் கட்டி பொங்கல் பானை வைக்கப்பட்டிருந்தது.
மாணவ, மாணவிகள் 10 குழுக்களாக பிரிந்து 10 பானைகளில் பொங்கலிட்டனர். பொங்கல் பொங்கிய போது மாணவ, மாணவிகள் குலவையிட்டு ஆடி பாடி கொண்டினர். இதில் மாணவர்கள் குலவையிட்டதை பார்த்த மாணவிகள் பலர் அவர்களை கலட்டா செய்தனர்.
மாணவர்கள் வேஷ்டி அணிந்தும், மாணவிகள் சேலை அணிந்தும் விழாவில் பங்கேற்றனர்.
விழாவை முன்னிட்டு கோலப்போட்டி உள்பட பல்வேறு போட்டிகள் நடந்தன. மாலையில் கலைநிகழ்ச்சிகளுடன் நிறைவு விழா நடந்தது.
இது போல் சாரதா மகளிர் கல்லூரியிலும் பொங்கல் விழா களைகட்டியது. கல்லூரி செயலாளர் சரவண தவ பிரியம்பா பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார். சாரதா பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் சேலை அணிந்து திரண்டு வந்து 10 பானைகளில் பொங்கலிட்டனர். இந்த விழாவில் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications