கிரிக்கெட் நடத்தி நடிகர்களை ஜோக்கர் ஆக்கிய நடிகர் சங்கத்தில் இருக்க மாட்டேன்: சிம்பு ஆவேசம்
சென்னை: நடிகர் சங்கத்தில் இருந்து விலகப்போவதாக நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார். கிரிக்கெட் போட்டி என்ற பெயரில் நடிகர்களை ஜோக்கர்கள் ஆக்கியதுதான் மிச்சம் என்றும் அவர் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் அணி சார்பில் துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர் சிலம்பரசன். ஆனால், விஷால் அணி வெற்றி பெற்று, நாசர் தலைவராகியுள்ளார்.
இந்நிலையில், நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை, சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடிகர் சங்கத்தின் சார்பில் நடிகர்கள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சிம்பு மிஸ்சிங்
இதில் பங்கேற்க, அஜித், விஜய் ஆகிய மாஸ் ஹீரோக்கள் மட்டுமின்றி, சிம்புவும் வரவில்லை. அஜித் மற்றும் விஜய் ஆகியோரை விஷால் விமர்சனம் செய்ததாகவும், இதற்காக சிம்பு கோபப்பட்டதாகவும் கூட தகவல்கள் வெளியாகின.

விலக முடிவு
இந்நிலையில் சிம்பு இன்று, ஆங்கில வெப்சைட் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: பல்வேறு காரணங்களுக்காக நடிகர் சங்கத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன்.

உதவியே இல்லை
நடிகர்களுக்கு ஒரு பிரச்சினையென்றால் உதவத்தான் நடிகர் சங்கம் உள்ளது. ஆனால், எனக்கே ஒரு பிரச்சினை வந்தபோது கூட நடிகர் சங்கம் ஒரு உதவியையும் செய்யவில்லை.

அப்செட்
சமீபத்தில் நடிகர் சங்கம் நடத்திய கிரிக்கெட் போட்டி என்னை மிகவும் அப்செட் ஆக்கிவிட்டது. அந்த போட்டியின் மூலம், பெரும்பாலான நடிகர்கள் ஜோக்கர்களாக்கப்பட்டனர். (இப்போட்டியில் சிறுபிள்ளைத்தனமாக நட்சத்திரங்கள் கிரிக்கெட் ஆடியது வலைத்தளங்களில் கேலிக்குள்ளானது).

பீப் பாடல்
நடிகர் சங்கத்தின் உறுப்பினர் அட்டையை திருப்பி கொடுத்துவிடலாம் என்று திட்டமிட்டுள்ளேன். இவ்வாறு சிம்பு பேட்டியளித்ததாக அந்த வெப்சைட் செய்து வெளியிட்டுள்ளது. சமீபத்தில் பீப் பாடலுக்காக காவல்துறை சிம்புவை நெருக்கியபோது, நடிகர் சங்கம் ஆதரவு குரல் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications