சிவகங்கை அருகே கச்சநத்தம் படுகொலை- பலி எண்ணிக்கை 3- ஆக உயர்வு
சிவகங்கை அருகே கச்சநத்தம் படுகொலை சம்பவத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நபர் பலியானதைத் தொடர்ந்து அச்சம்பவத்தில் பலி எண்ணிக்கை 3-ஆக உயர்ந்தது.
Recommended Video

சிவகங்கை: சிவகங்கை அருகே நடந்த சாதி ரீதியிலான மோதலில் ஒரு பிரிவினரை கடுமையாக தாக்கிய சம்பவத்தில் பலி எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது.
கச்சநத்தம் மற்றும் ஆவரங்காடு கிராமங்கள் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ளன. இங்கு கச்சநத்தம் கோயில் திருவிழாவில் முதல் மரியாதை வழங்குவது தொடர்பாக இரு சமூகத்தினரிடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இளைஞர்கள்
இதனால் இரு பிரிவினருக்கும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கச்சநத்தம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது ஆவரங்காடு கிராமத்தைச் சேர்ந்த சிலர் வழிமறித்து தாக்கியதாக தெரிகிறது.

காயம்
இதையடுத்து கடந்த 28-ஆம் தேதி கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களுடன் ஆவரங்காடு கிராமத்திநர் கச்சநத்தம் கிராமத்துக்குள் புகுந்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்களை சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் சுரேஷ், சந்திரசேகர், மருது, மலைச்சாமி, சுகுமாறன், ஆறுமுகம், சண்முகநாதன் உள்ளிட்டோர் காயமடைந்தனர்.

6 பேர் சிகிச்சை
இதையடுத்து அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதில் ஆறுமுகம் மற்றும் சண்முகநாதன் ஆகியோர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டனர். மற்ற 6 பேர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

3-ஆவது நாளாக போராட்டம்
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சந்திரசேகரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஏற்கெனவே உயிரிழந்த இருவரின் உடல்களை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் மதுரை ஆட்சியர் அலுவலகம் அருகே 3-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications