தமிழகத்தை உலுக்கிய சென்னை சிறுமி ஹாசினி கொலை வழக்கில் வரும் 19ஆம் தேதி தீர்ப்பு!
தமிழகத்தை உலுக்கிய சென்னை சிறுமி ஹாசினி கொலை வழக்கில் வரும் 19 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது.
Recommended Video

சென்னை: தமிழகத்தை உலுக்கிய சென்னை சிறுமி ஹாசினி கொலை வழக்கில் வரும் 19 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என செங்கல்பட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை குன்றத்தூரை சேர்ந்தவர் தஷ்வந்த். மென்பொறியாளரான இவர் மவுலிவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தான்.
அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த 6 வயது சிறுமி ஹாசினியை கடந்த பிப்ரவரி மாதம் பாலியல் பலாத்காரம் செய்ததோடு சிறுமியை கொன்று உடலை எரித்தான் தஷ்வந்த்.
சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறுமியை கொன்ற தஷ்வந்துக்கு தக்க தண்டனை கிடைக்க வேண்டும் என்று போராட்டங்கள் நடைபெற்றன.

தாயும் கொலை
இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த தஷ்வந்த் கடந்த டிசம்பர் 2ஆம் தேதி தனது தாய் சரளாவையும் கொலை செய்து தப்பினார். மும்பையில் பதுங்கி இருந்த அவரை தனிப்படை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

கோட்டில் ஆஜர்
ஹாசினி கொலை வழக்கு விசாரணையின் போது செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டில் ஆஜர் ஆகாமல் இருந்த தஷ்வந்துக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தஷ்வந்தை தொடர்ந்து செங்கல்பட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி வருகிறார்கள்.

நீதிபதி வேல்முருகன்
இந்நிலையில் சிறுமி ஹாசினி கொலை வழக்கில் வரும் 19ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என செங்கல்பட்டு மகளிர் நீதீமன்றம் அறிவித்துள்ளது. நீதிபதி வேல்முருகன் தீர்ப்பு வழங்கவுள்ளார்.

தீர்ப்பு எப்படி இருக்கும்?
தமிழகத்தை உலுக்கிய கொலை என்பதால் என்ன தீர்ப்பு வழங்கப்படும் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. கொலையாளி தஷ்வந்த் மீது தனது தாயை கொலை செய்த மற்றொரு வழக்கும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications