பள்ளி மாணவர்களின் இலவச பயணத்திற்கு ஸ்மார்ட் கார்டு..தமிழக அரசுக்கு இழப்பீடு எத்தனை கோடி தெரியுமா?
சென்னை: நடப்பாண்டில் அனைத்து மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் ஸ்மார்ட் கார்டாக வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 2022-23 ஆம் ஆண்டு இலவச பேருந்து பயணச் சீட்டுகளுக்கான இழப்பீடாக ரூ.1300 கோடியை போக்குவரத்து கழகங்களுக்கு மாநில அரசு ஒதுக்கியுள்ளது. மேலும் நடப்பு ஆண்டில் இந்தத் தொகை ரூ.1,500 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 7ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்னி வெயிலின் தாக்கத்தின் காரணமாக பள்ளிகள் திறக்கப்படும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. வருகிற ஜூன் 7ஆம் தேதி 1 முதல் பிளஸ் 2 வரை அனைவருக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் 1ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள், அரசு பாலிடெக்னிக், ஐ.டி.ஐ.யில் படிக்கும் மாணவர்களுக்கு போக்குவரத்து கழகங்கள் சார்பில் இலவச பஸ் பாஸ் வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. தற்போதைய நிலவரப்படி மாநிலம் முழுவதும் சுமார் 30 லட்சத்து 14 ஆயிரம் பேர் பயனடையலாம் என கணக்கிட்டுள்ளனர்.

கடந்த 2020 - 2021ஆம் கல்வியாண்டில் கொரோனா ஊரடங்கை தொடர்ந்து பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டபோது இலவச பஸ் பாஸ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. அப்போது சீருடை அணிந்த மாணவர்கள் மற்றும் கல்லூரி அடையாள அட்டைகளை காண்பிக்கும் மாணவர்கள் எந்த தடையும் இல்லாமல் அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் சில இடங்களில் பஸ்களில் மாணவர்களுக்கும், நடத்துனர்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.
கடந்த 2022-23 ஆம் கல்வி ஆண்டில் மத்தியில் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டது. இந்த காலகட்டத்திலும் பஸ் பாஸ் இல்லாத காரணத்துக்காக மாணவர்கள் யாரும் இறக்கி விடப்படவில்லை. நடப்பாண்டில் அனைத்து மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் ஸ்மார்ட் கார்டாக வழங்குவதற்கான பணிகளை முன்னெடுத்து வருவதாக போக்குவரத்து துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து துறை அதிகாரி, எல்லா மாணவர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்க திட்டமிட்டு இருக்கின்றோம்.
மாணவர்கள் பயணம் செய்யும்போது ஸ்மார்ட் கார்டு எடுத்துச் செல்லுங்கள். கல்வி நிறுவனங்களிடம் இருந்து இலவச பாஸ் கோரிக்கையை பெற்ற பின்னரே பயனாளிகள் இறுதி எண்ணிக்கை தெரிய வரும். போக்குவரத்து துறையின் தொழில்நுட்ப கிளையான சாலை போக்குவரத்து நிறுவனம் மாணவர்களுக்கான பஸ் பயண அட்டைகளை வழங்கும் செயல்முறையை தொடங்கியுள்ளது. மேலும் ஸ்மார்ட் கார்டு அச்சிடுவதற்கான டெண்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது.

வருகிற ஜூன் அல்லது ஜூலை மாத இறுதிக்குள் அனைவருக்கும் ஸ்மார்ட் கார்டு பஸ் பாஸ் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கல்வி நிறுவனத்தில் இருந்தும் பஸ் பாஸ் கோரும் மாணவர்களின் விரிவான விபரங்கள் சேகரிக்கப்பட்டவுடன் மாணவர்கள் படிக்கட்டுகளில் பயணம் செய்வதை தடுக்கும் வகையில் பஸ் அட்டவணை திருத்தம் செய்யப்பட்டு, கூடுதல் பஸ் சேவைக்கான நடவடிக்கையும் எடுக்கப்படும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2022-23 ஆம் ஆண்டு இலவச பேருந்து பயணச் சீட்டுகளுக்கான இழப்பீடாக ரூ.1300 கோடியை போக்குவரத்து கழகங்களுக்கு மாநில அரசு ஒதுக்கியுள்ளது. மேலும் நடப்பு ஆண்டில் இந்தத் தொகை ரூ.1,500 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications