இனப்படுகொலை பயங்கரவாதி ராஜபக்சே வருகைக்கு எஸ்.டி.பி.ஐ கடும் எதிர்ப்பு!
சென்னை: இனப்படுகொலை பயங்கரவாதி ராஜபக்சே இந்தியா வருவதற்கு எஸ்.டி.பி.ஐ கட்சி கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய சமூக ஜனநாயக கட்சியின் (எஸ்.டி.பி.ஐ) மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்...
மோடி பிரதமராக பதவியேற்கவுள்ள விழாவில் பங்கேற்பதற்காக இந்தியா வருகை தரவுள்ள இலங்கை அதிபர் ராஜபக்சேவிற்கு எஸ்.டி.பி.ஐ கட்சி தனது கடும் எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவிக்கிறது.

2009 ல் இலங்கையில் நடைபெற்ற இறுதிப்போரில் லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். பல லட்சம் மக்கள் அகதிகளாக்கப்பட்டதுடன், தமிழ் பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டனர்.
இத்தைகைய இனப்படுகொலை செய்த இலங்கை அரசிடம் காங்கிரஸ் நட்பு பாராட்டி வந்ததை போன்று. பா.ஜ.க வும் தொடக்கத்தில் இருந்தே நட்பு பாராட்டி வருகிறது. மேலும் அந்த நட்பை வலுப்படுத்தும் விதமாகத்தான் தற்போது மத்தியில் அமையவுள்ள பா.ஜ.க அரசின் பதவியேற்பு விழாவிற்கு இலங்கை அதிபர் ராஜபக்சே வருகை தருகிறார் . இதற்கு எஸ்.டி.பி.ஐ கட்சி கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது.
ஆகவே, தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் இலங்கை இனப்படுகொலை குற்றவாளி ராஜபக்சே இந்தியா வருவதை அனுமதிக்க கூடாது என கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications