தண்ணீரில் மூழ்கி கிடக்கும் சோழிங்க நல்லூர் - அவதியில் ஐ.டி.நிறுவன ஊழியர்கள்
சென்னை: சென்னையில் பெய்த கனமழையால் புறநகர் பகுதியான சோழிங்கநல்லூர் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
ஐ.டி நிறுவனங்கள் நிறைந்துள்ள பகுதியான இங்கு கல்லூரிகள், விடுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. அந்த பகுதிகளில் படகுகளுடன் மீனவர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சோழிங்கநல்லூரில் உள்ள சதுப்பு நிலப்பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழையால் தாழ்வான நிலங்களில் தண்ணீர் புகுந்து ஏரி போல் காட்சியளிக்கிறது

விடுதிகள் ஏராளம்:
ஐ.டி நிறுவனங்கள் நிறைந்துள்ள சோழிங்கநல்லூர் பகுதியில் பணிபுரிவோருக்கான தங்கும் விடுதிகள் ஏராளமாக உள்ளன. இங்கிருப்பவர்களை படகுகள் மூலம் மீனவர்கள் உதவியுடன் மீன்வளத்துறையினரும், தீயணைப்புத்துறையினரும் மீட்டு வருகின்றனர்.

மின்சாரம் துண்டிப்பு:
மழை காரணமாக வீட்டிலிருந்தே இணையதளம் மூலமாக பணிகளை முடிக்கும் படி ஐ.டி நிறுவனங்கள் அறிவுறுத்தினாலும், மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அதற்கான பணிகளை செய்து முடிக்க சிரமம் ஏற்பட்டுள்ளதாக ஐ.டி நிறுவன ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

தங்குவதற்கு சிரமம்:
மேலும், தங்குவதற்கு குறைந்த விலையிலான பிளாட்களை தேர்வு செய்வதால், மழை காலங்களில் சிரமத்துக்குள்ளாவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

மீட்புப் பணி தீவிரம்:
சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து வருவதால் ஏராளமான மக்கள் டிராக்டர்கள், லாரிகள் மூலமாகவும் மீட்கப்பட்டு வருகின்றனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேற்று மீட்கப்பட்ட நிலையில் சோழிங்கநல்லூர் பகுதியில் தொடர்ந்து மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications