மெட்ரோ வாட்டர்... மாநகராட்சி போக்குவரத்து பணிகளுக்கு தடை இல்லை- ராஜேஷ் லக்கானி அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்திருந்தாலும் மக்களுக்கான முக்கிய பணிகளை தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெற்று மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி, தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தாலும் மின்சாரம், தண்ணீர், போக்குவரத்து உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளில் முக்கிய பணிகளை தங்கள் அனுமதி பெற்று மேற்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
மெட்ரோ வாட்டர், மாநகராட்சி போக்குவரத்து உள்ளிட்ட டெண்டர் பணிகள் அவசரம், அத்தியாவசியம் என்றால் ஆணையத்தின் அனுமதி பெற்று செய்யலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பல்வேறு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள எவ்வித தடையும் இல்லை என லக்கானி விளக்கியுள்ளார். தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் மூலம் தகவல் கொடுத்துவிட்டு அந்தந்த துறை தலைவர்கள் தினசரி பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் லக்கானி விளக்கியுள்ளார்.
மிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்து விட்ட நிலையில் ஓட்டுச்சாவடி அமைப்பது, மனு பெறுவது, பரிசீலனை செய்வது, ஓட்டு எண்ணிகை மற்றும் பாதுகாப்பு உள்பட பல்வேறு ஏற்பாடுகளை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தலைமையில் அதிகாரிகள் செய்து வருகிறார்கள். தமிழ்நாடு முழுவதும் சுமார் 3 லட்சம் ஊழியர்கள் தேர்தல் ஏற்பாடு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் தேர்தல் அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். பறக்கும் படையினரும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் விழிப்புணர்வு பிரசாரங்களும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications