சென்னை உட்பட தமிழகத்தின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் ஜில் தகவல்!
சென்னை உட்பட தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video

சென்னை: தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையிலும் லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்தது.
இதனால் தென் மாவட்டங்களில் சுட்டெரித்த வெயில் குறைந்து இதமான சூழல் நிலவியது. மேலும் தென் மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகளும் வேகமாக நிரம்பின.

மக்கள் மகிழ்ச்சி
இதன் காரணமாக மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கோடைக்காலத்தின் தொடக்கத்திலேயே கொட்டிய மழையால் தண்ணீர் தட்டுப்பாடு பெருமளவு இருக்காது என மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தாழ்வு பகுதியானது
இந்நிலையில் அரபிக் கடல் பகுதிக்கு நகர்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுகுறைந்து தாழ்வு பகுதியானது என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மழை
இதன்காரணமாக வடதமிழகத்தின் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யும் என்றும் பாலச்சந்திரன் கூறினார்.

இடியுடன் கூடிய மழை
மேலும் சென்னையில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக பாலச்சந்திரன் கூறியுள்ளார். தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, திருவண்ணாமலையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications