மாமனார், மாமியார், மனைவிக்கு சரமாரி அடி.. மாமியார் மண்டை உடைந்தது.. மருமகன் தற்கொலை!
சென்னை: சென்னையில் கோவத்தில் மாமியாரின் மண்டையை உடைத்த மருமகன் போலீசுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம் வெங்கடமங்கலத்தை சேர்ந்தவர் சாமிதுரை கொத்தனார். இவரது மனைவி அம்பிகா.
சாமிதுரையின் வீடு அருகே அம்பிகாவின் பெற்றோர் வீடு உள்ளது. சாமிதுரைக்கு குடிப்பழக்கம் உண்டு. நேற்று இரவு அவர் குடித்துவிட்டு மனைவியுடன் தகராறு செய்தார்.

இதனை அம்பிகாவின் பெற்றோர் கண்டித்தனர். ஆத்திரம் அடைந்த சாமிதுரை உருட்டு கட்டையால் மாமனார், மாமியார், மனைவியை சரமாரியாக தாக்கினார். இதில் மாமியாரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் சாமிதுரையை போலீசில் பிடித்துக்கொடுக்க வேண்டும் என்று அக்கம் பக்கத்தினர் தெரிவித்து வந்தனர். இரவில் வீட்டிற்கு வந்த சாமிதுரை வெளியில் சென்று தூங்குவதாக மனைவியிடம் கூறி புடவையை எடுத்துச்சென்றார்.
தன்னை போலீசில் பிடித்துக்கொடுத்து விடுவார்களோ என்று பயந்த அவர் வீட்டின் அருகில் உள்ள மரத்தில் புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சேலையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications