மனைவியை அனுப்ப மறுத்த மாமியாரை கடத்திய மருமகன் கைது
சென்னை: குடும்பம் நடத்த மனைவியை தன்னுடன் அனுப்ப மறுத்த மாமியாரை கடத்திய மருமகனை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி விஜயா. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததையடுத்து கோபம் அடைந்த விஜயா கடந்த வாரம் பெருங்குடியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்தார். ரமேஷ் சமாதானம் பேசியும் ஏற்கவில்லை.
இந்த நிலையில் செவ்வாயன்று காலை ரமேஷ், நண்பர்கள் சுரேஷ், கமலக்கண்ணன் ஆகியோருடன் காரில் மாமியார் வீட்டிற்கு வந்தார். அப்போது மனைவி விஜயா வீட்டில் இல்லை.
அவர் தனது மாமியார் அபிராமியிடம் மனைவியை அனுப்பி வைக்குமாறு கேட்டாராம். ஆனால் அதற்கு ஒப்புகொள்ளாத அவர் ரமேசை கண்டித்ததாக தெரிகிறது.
இதனால் கோபம் அடைந்த ரமேஷ் மற்றும் நண்பர்கள் அபிராமியை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்தி சென்றனர். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து தாம்பரத்தை அடுத்த இரும்புலியூர் சோதனை சாவடி அருகே கடக்கமுயன்ற காரை போலீஸார் மடக்கி பிடித்து அபிராமியை மீட்டனர். கடத்தலில் ஈடுபட்ட அவரது மருமகன் ரமேஷ் உள்பட 3 பேரையும் கைது செய்தனர். இதுகுறித்து துரைப்பாக்கம் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications