மனைவியை அனுப்ப மறுத்ததால் கோபம்.. மாமனார் காதைக் கடித்துத் துப்பிய மருமகன்!
ஈரோடு: ஈரோடு அருகே அம்மா வீட்டிலேயே தங்கிக் கொண்டு, வேறு ஒருவருடன் தொடர்பு வைத்துக் கொண்டு, தன்னுடன் குடும்பம் நடத்த மனைவி வர மறுத்ததால் கோபமடைந்த கணவர் அவரை குடும்பம் நடத்தக் கூப்பிட்டார். அதற்கு அவரது மாமனார் மறுத்து மருமகனைத் திட்டியுள்ளார். இதனால் கோபமடைந்த மருமகன், மாமனாரின் காதைக் கடித்துத் துப்பி விட்டார்.
ஓலப்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன். இவர் தனியார் கல்லூரிப் பேருந்தில் டிரைவராக இருக்கிறார். இவரது மனைவி பெயர் சுமதி. சில ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
மூன்று ஆண்டுக்கு முன் முருகேசன்-சுமதி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து கணவரை பிரிந்து சென்ற சுமதி சில மாதங்களுக்கு பிறகு, வேறு ஒருவருடன் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
அந்த நபருடன் ஏற்பட்ட பிரச்சனையை தொடர்ந்து அவரை விட்டு பிரிந்த சுமதி சில வாரங்களுக்கு முன் பெற்றோர் வீட்டுக்கு திரும்பியுள்ளார். இதை தெரிந்துகொண்ட முருகேசன், மாமனார் வீட்டுக்கு சென்று மீண்டும் குடும்பம் நடத்த வருமாறு மனைவியை அழைத்துள்ளார். ஆனால், சுமதி முருகேசனுடன் வர மறுத்து விட்டார்.
இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மருமகன் முருகேசனை, மாமனார் சுப்பிரமணியன் திட்டியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த முருகேசன், மாமனாரின் வலது காதை ஆவேசத்துடன் கடித்து துப்பினார். வலியால் துடித்த சுப்பிரமணி, மருமகனை அங்கிருந்த கட்டையை எடுத்து தாக்கியுள்ளார்.
இதனால், வலி தாங்க முடியாமல் அங்கிருந்து முருகேசன் ஓடி விட்டார். கடிபட்ட சுப்பிரமணியனும், கடித்த முருகேசனும் தனித் தனியாக போய் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர்.
சிகிச்சைக்குப் பின்னர் முருகேசனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications