நல்லாத் தட்டுங்கய்யா கையை அந்த "மயில்" நீதிபதிக்கு.. தட் கரடியே காரித் துப்பிய மொமன்ட்!
சென்னை: அடிப்படை அறிவியல் அறிவே இல்லாமல் ஆண் மயிலின் கண்ணீரால்தான் பெண் மயில் கர்ப்பமடைகிறது என்று உளறிய ராஜஸ்தான் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியை ஊர் உலகமே கழுவிக் கழுவி ஊற்றி வருகிறது. இப்படிப்பட்ட ஒரு மடத்தனமான கருத்துக்களை மூளைக்குள் பதுக்கி வைத்திருந்த இவர் எப்படி நீதிபதியாக செயல்பட்டார் என்பதுதான் அனைவரின் ஆச்சரியமாகவும் இருக்கிறது.
பாவம் தேவையில்லாமல் இவரது அறிவியல் ஆசிரியரும் கூடவே வாங்கிக் கட்டிக் கொள்வதுதான் வேதனை. தனது ஆசிரியருக்கு இந்த ஜட்ஜ் நல்ல பெயரையும், புகழையும் வாங்கிக் கொடுத்து விட்டார். போகிற வருகிறவர்கள் எல்லாம் நீதிபதி மகேஷ் சந்திர சர்மாவை கேலி செய்து காலி செய்து கொண்டுள்ளனர்.
அரசியல்வாதிகள் மட்டும்தான் வாயை மூடிக் கொண்டுள்ளனர். ஆனால் ஒட்டுமொத்த தேசமும் இவர் மீது ஓங்கி காரித் துப்பிக் கொண்டுள்ளது சமூக வலைதளங்கள் மூலமாக.

கோமியம் குடிங்க
இந்த நீதிபதி தனது பதவிக்காலத்தின் கடைசி நாளில் பசுவைப் பற்றிப் புகழ்ந்து விஞ்ஞானம், அறிவியல் ஆகியவற்றையெல்லாம் தூக்கி குப்பையில் போட்டு விட்டு புராணங்களையும், வேதங்களையும் மேற்கோள் காட்டி கதை கதையாக அடித்து விட்டுச் சென்றார். கோமியம் (பசு மூத்திரம்) குடித்தால் ஆரோக்கியமாக இருக்கலாம் என்று கூறியிருந்தார்.

மயில் கதை
ஆனால் இவர் அடித்து விட்ட மயில் கதைதான் இப்போது மக்களை குபீர் குபீரென சிரிக்க வைத்து வருகிறது. ஆண் மயில் எப்படி பெண் மயிலை கர்ப்பமாக்குகிறது என்று கூறி சர்மா அளந்து விட்ட கதை அறிவியல் படித்தவர்களை மட்டுமல்லாமல் சாமானிய மக்களையும் கூட பார்ரா இந்த ஜட்ஜோட அறிவை என்று கூறி வியக்க வைத்துள்ளது.. வியர்க்க வைத்து விட்டது.!
|
நல்லா தட்டுங்கய்யா.. கையை
இந்த நீதிபதியின் விஞ்ஞானி அறிவு குறித்து வியந்துள்ள நடிகை சோனாக்ஷி சின்ஹா, அவரை கேலி செய்து டிவீட் போட்டுள்ளார். மைன்ட் புளோயிங் என்று கூறியுள்ள சோனாக்ஷி, நல்லா கை தட்டுங்க என்று கூறி கலாய்த்துள்ளார்.
|
எனக்கு கொஞ்சம் கண்ணீர் கொடுங்களேன்
நடிகை ஸ்ருதி சேத், எனக்கு கொஞ்சம் கண்ணீர் தேவை என்று கூறி ஜட்ஜ் சர்மாவைக் கலாய்த்து டிவீட் போட்டுள்ளார். இன்னும் ஓயாமல் ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள் இந்த அறிவிலி நீதிபதியை.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications